சதீஸின் வித்தைக்காரன் மேஜிக் காட்டியதா ?? – Vithaikaran Movie Review

சதீஸின் வித்தைக்காரன் மேஜிக் காட்டியதா ?? White Carpet Films சார்பில், K விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில், சதீஸ் நாயகானாக நடித்திருக்கும் படம் வித்தைக்காரன். நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடித்திருக்கும் படம். ஹெய்ஸ்ட் மற்றும் ப்ளாக் காமெடி வகையறாவில் வந்திருக்கும் படம். சென்னைக்குள் கள்ளக்கடத்தலில் கொடி கட்டிப்பறக்கும் மூன்று கேங் அந்த மூன்று கேங்கிலும், மேஜிஸியன் ஒருவன் உள்ளே குட்டையை குழப்பி அவர்களிடமிருந்து கொள்ளை அடிக்கிறான். எப்படி ? எதற்காக ? என்பது தான் கதை. காமெடி கலந்த வித்தியாசமான ஹெய்ஸ்ட் திரைப்படமாக வந்திருக்கிறது “வித்தைக்காரன்”. ஒரு வகையில் படத்திற்கு பலமும் அதுதான் மைனஸும் அது தான். ஏனென்றால் படத்தின் மிக சீரியஸான காட்சிகளில் காமெடி செய்கிறார்கள். காமெடி காட்சிகளில் சீரியஸாக இருக்கிறார்கள். சதீஷ் அவருக்கு இந்தப்படம் நல்ல வாய்ப்பு ஆனால் தவறவிட்டிருக்கிறார். ஒரு மேஜிக்மேனுக்குரிய எந்த உழைப்பு உடல்மொழியும் இல்லை. சரி இத்தனை பெரிய புத்திசாலி அத்தனை பெரிய கேங்கை ஏமாற்றும் காட்சிகளில் வெறும் காமெடியனாகவே தெரிகிறார். ப்ளாக் காமெடி சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. படத்தைக் காப்பாற்றுவது ஆனந்த்ராஜும் அவரது கேங்கும் தான். ஆனந்த்ராஜ் அடிக்கும் ஒன்லைனர் வெடித்து சிரிக்க வைக்கிறது. ஏர்ஃபோர்ட் காட்சி முதல் பல இடங்களில் படத்திற்கு நிறைய செலவு செய்திருப்பது தெரிகிறது. ஆனாலும் ஏதோ குறை.. நாயகியாக சிம்ரன் குப்தா பெரிய வேலை இல்லை. மதுசூதனன் ராவ், சுப்பிரமண்ய சிவா, ஜான் விஜய், ஆஷிஃப் அலி, பாவெல், ஜப்பான் குமார், சாம்ஸ், சாமிநாதன், மாரிமுத்து என ஒரு பெரிய கூட்டம் படத்தில் வருகிறது. எல்லோரும் அவர்களுக்கு தந்ததை செய்துள்ளார்கள். சாம்ஸ் ஜப்பான் குமார் இருவரும் தனித்து தெரிகிறார்கள். எடிட்டிங் படத்தின் மிகப்பெரிய மைனஸ், முதல் பாதியெல்லாம் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. புத்திசாலித்தனமான கதை, ஐடியா என அங்கங்கே ஈர்க்கும் படம் மொத்தமாக கவரவில்லை. வித்தைக்காரன் மேஜிக் நிகழ்த்தவில்லை.

64