ஆக்சன் விருந்தாக வந்திருக்கும் படம் ஜோஷ்வா – ஜோஷ்வா படம் எப்படி இருக்கிறது – Joshva Movie Review

ஆக்சன் விருந்தாக வந்திருக்கும் ஜோஷ்வா எப்படி இருக்கிறது !! பல வருடக் காத்திருப்புகளுக்கு பின்னர் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது ஜோஷ்வா இமை போல் காக்க. தமிழில் ஒரு ஹாலிவுட் ஸ்ட் இதுவரையிலும் முன்னணி நடிகர்களை மட்டுமே இயக்கி இருக்கும் கௌதம் மேனன் இயக்கத்தில், அறிமுக நடிகரான வருண் நடிப்பில் வெளிவந்திருக்கிறது இப்படம். கிட்டத்தட்ட ஐந்து வருடமாக தயாரிப்பில் இருந்து படம் வெளியாகி இருந்தாலும், ரசிகர்களிடம் ஓரளவு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் இந்த படத்தின் கதையை தெளிவாக சொல்லிவிட்டது. ஹீரோயினை காக்க மொத்த எதிரிகளுடன் ஹீரோ மோதுவது தான் கதை. இதுபோன்ற கதைகள் ஹாலிவுட்டில் அதிகம் வரும். ஆக்சனுக்கு அதிகம் மதிப்பு கொடுத்து, கதையை கொஞ்சமாக சொல்லி, முழுக்க முழுக்க சண்டை காட்சிகளுடன் படமாக்கும் படங்கள், சண்டை காட்சி ரசிகர்களுக்காக உலகம் முழுவதும் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் உருவாகியிருக்கும் படம் தான் ஜோஷ்வா இமை போல் காக்க. படத்தின் கதை சிம்பிள் தான் வருண் ஒரு காண்ட்ராக்ட் கில்லர் அது தெரிய வரும்போது அவரது காதலி அவரை பிரிந்து போகிறார் பின்னர் ஒரு நாள் வருணின் காதலிக்கு, அவரது வேலை காரணமாக அமெரிக்காவில் ஒரு போதை பொருட்கள் மன்னனால் கொலை மிரட்டல் வருகிறது. உலகம் முழுக்க இருந்து பலர் பணத்திற்காக அவரை கொல்ல முயல்கின்றனர். அவர்களிடம் இருந்து வருண் எப்படி தன் காதலியை காப்பாற்றுகிறார் என்பதுதான் படம். படத்தின் டைட்டில் ஆரம்பித்து, இறுதி டைட்டில் வரும் வரை ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெரிய சண்டைக் காட்சி வந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் படத்தில் கௌதம் மேனனுக்கே உரிய காதல் காட்சிகள் நிறைய இருக்கிறது. கௌதம் மேனனின் முத்திரை காட்சிகளுக்கும் குறைவில்லை. ஆனால் மொத்த படமாக ஏதோ ஒன்று குறைவது படத்தில் மிகப் பெரிதாக தெரிகிறது. வழக்கமாக கௌதமரின் படங்களில் கதைக்கான முக்கியத்துவம் மிக அழுத்தமாக இருக்கும். காட்சிகளின் பின்னணியும் அதன் காரணங்களும் அழகாக சொல்லப்பட்டிருக்கும். இப்படத்தில் சண்டைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிப்பதால் கதைக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை, அதிலும் கிருஷ்ணா கதாபாத்திரம் எழுதப்பட்டிருக்கும் விதம் அது முடியும் விதமெல்லாம் ரொம்ப சோகமாக இருக்கிறது. கிருஷ்ணா சொல்லும் கதைக்கும் அவர் ரியாக்ட் செய்வதற்கும் கொஞ்சம் கூட லாஜிக் ஒட்டவில்லை. இது போல் படம் முழுக்க நிறைய லாஜிக் ஓட்டைகள். படத்தில் மற்றொரு மைனஸ் படத்தின் பட்ஜெட். இதை இன்டர்நேஷனல் கில்லர் படம் என்று சொல்லிக் கொண்டாலும், படம் என்னவோ சென்னையில் தான் நடைபெறுகிறது. பல ஆக்சன் காட்சிகளை குறைந்த பட்ஜெட்டை வைத்து ஒப்பேற்றி இருக்கிறார்கள். அதுவும் அப்பட்டமாக திரையில் தெரிவது படத்திற்கு பலவீனமாக அமைந்துவிட்டது சின்ன சின்ன ரோல்களில் நடித்து பீல் ஹீரோவான வரும் இப்படத்தில் ஆக்சன் ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார் கிட்டத்தட்ட ஒரு ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் படம் முழுக்க முறைத்துக் கொண்டிருக்கிறார் இன்னும் கொஞ்சம் நடிப்பை வளர்த்திருக்கலாம் ஓடுவதற்கு சரி செய்திருக்கலாம் ஆனாலும் அவர் ஆக்சன் செய்வது நம்பும்படி இருப்பது அவரின் பலம் பிக் பாஸ் ஆரவ்வின் மனைவி ராஹேய் இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். கதை முழுக்க அவரைச் சுற்றி தான். அதை உணர்ந்தே நடித்திருக்கிறார். திரிஷா சாயலில் இருப்பதால் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கலாம் ஆனால் வருணை விட கொஞ்சம் மூத்தவராக தெரிவது நமக்கு மட்டும் தானா எனத் தெரியவில்லை. தர்பூகா சிவாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது பாடல்களும் கூட கதையோடு காட்சிகளோடு இருப்பது அசத்தல் ஹாலிவுட் ஆக்சன் படம் மட்டுமே பார்த்து சலித்தவர்களுக்கு தமிழில் ஒரு புது முயற்சியாக இந்த படத்தை உருவாக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் வெறும் முயற்ச்சியாக மட்டுமே முடிந்திருக்கிறது. இருந்தாலும் படம் எங்கேயும் போரடிக்காமல் ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மை சுவாரசியப்படுத்துவது படத்தின் பலம்.

43