சென்னை.
நடிகர் அல்லு சிரீஷ் ஒரு டிரெண்ட் செட்டர் என்பதில் சந்தேகமில்லை. நடிகரும் பொழுதுபோக்கு கலைஞருமான இவர் மக்களை கவரும் வகையில் புதுபுது படைப்புகளை இயக்க தயங்கியதில்லை. அல்லு சிரீஷ் தென்னிந்திய விருது விழாக்களான ஐஃபா, பிலிம்பேர் மற்றும் சைமா உள்ளிட்ட பல விருது விழாக்களை தொகுத்து வழங்கியுள்ளார், இவரின் நகைச்சுவை உணர்வின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார். டிக்டாக்கில் இணைந்த முதல் நடிகர் இவர், மேலும் அதில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டிருந்தார். இந்தி பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமான தர்ஷன் ராவல் மற்றும் நீதி மோகன் ஆகியோர் பாடிய இந்தி – விலாயதி ஷரப் என்ற மியூசிக் வீடியோவில் நடித்து, இந்தி சிங்கிளில் நடித்த முதல் இளம் தென்னிந்திய நடிகர் என்ற அங்கிகாரம் பெற்றுள்ளார்.
சிரீஷுக்கு மொழி ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. மேலும் மலையாள திரைப்படத்தில் நடித்த முதல் தெலுங்கு நடிகர் இவர், 1971: பியோண்ட் பார்டர்ஸ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் உடன் இணைந்து நடித்தார். நடிகர் அல்லு சிரீஷ் அவர்களின் வரவிருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஒரு காதல்-நகைச்சுவை, அதன் விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று தெரியப்பட்டுள்ளது. திரைப்படங்களைத் தவிர, சிரிஷ் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். மேலும் இனையத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர்களின் ஆதரவை பெற்று ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார்.