மீண்டும் தனுஷின் ‘கர்ணன்’ படத்தை கேரள வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய மோகன்லால்!

208

சென்னை

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.இந்நிலையில், கர்ணன் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கைப்பற்றி உள்ளாராம். முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையையும் மோகன்லால் தான் பெற்று இருந்தார் என்பதும் அந்த படத்தில் மூலம் மோகன்லாலுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.  தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் கேரளாவில் பெரிய அளவில் வெற்றி பெறுவதால் அங்கு அவரது படங்களை வாங்குவதற்க்கு பல வினியோகஸ்தர்கள் மத்தியில் போட்டிகள் நிலவுகிறது.