பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வகுப்புகள்…இயக்குநர் வெற்றிமாறனின் புதிய முயற்சி!

198

சென்னை.

தமிழ்த் திரையுலகில் ‘படிக்காதவன்’ ‘ஆடுகளம்’ ‘அசுரன்’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது சினிமா ஆசையால் பலர் நடிகராக, இயக்குனராக வர ஆசைப்பட்டு சினிமாவே தெரியாத சிலரிடம் திரைப்பட பயிற்சி கல்லூரி என்ற பெயரில் போலித்தனமாக ஒரு கல்லூரியில் பணத்தைக் கட்டி ஏமாறுகின்றனர். சினிமாவைப்பற்றி தெரியாதவர்கள் யாரிடமும் சிக்காமல் “திரையின் வழியே சமூக சமத்துவம்என்கிற கோட்பாட்டை  நிறுவ வெற்றிமாறன் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச சினிமா பயிற்சிகள் அளிக்கும் வகையில் இயக்குநர் வெற்றி மாறன் ‘சர்வதே திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம்’ என்ற பெயரில் சினிமா பயிற்சி பள்ளியை தொடங்கியுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் தலைமையில் இயங்கும் இந்த சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனத்தின், (IIFC -International Institute of Film and Culture) வழிகாட்டியாக ராஜநாயகம் செயல்படுகிறார். கல்லூரிகளில் திரைப்பட சம்மந்த படிப்பான விஸ்காம் பட்டப்படிப்பை உட்புகுத்தியதில் ராஜநாயகத்திற்கு பெரும் பங்கு உள்ளது. இந்த பயிற்சி பள்ளியின் செயலாளராக வெற்றி துரைசாமி பொறுப்பேற்றுள்ளார்.

IIFC இன்  சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு மாணவருக்கும் 100 சதவீத மானியங்களுடன் முழுமையான உணவு, குடியிருப்பு வசதிகள் வழங்கப்படும் .

THE ELEGIBILITY CRITERIA:

கல்வித் தகுதி: ஏதேனும் (ஊடகமல்லாத) பட்டம் பெற்றவர்கள்.

வயது எல்லை: 21 – 25

புவி-கலாச்சார பின்னணி: தமிழ் பேசும் + தமிழ் நாட்டிலிருந்து (முன்னுரிமை ஒரு மாவட்டத்திற்கு ஒன்று)

சமூக-பொருளாதார விருப்பம்: சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள்; முதல் தலைமுறை பட்டதாரிகள் .

100% மானியங்களுக்கான ஐந்து-படி தேர்வு:

ஆரம்ப ஆய்வு, எழுதப்பட்ட சோதனை, கல்வி நேர்காணல், தொழில்முறை நேர்காணல் மற்றும் வீட்டு வருகை

மொத்த உட்கொள்ளல்:

35-40 மாணவர்கள் (ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒருவர்)

இந்த இலவச திரைப்பட மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்பில் சேருவதற்கான மேலும் பல விவரங்களை அறிய இந்த இணையதளத்தை பார்க்கவும் – http://www.iifcinstitute.com/