சென்னை.
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை, ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருகும் “கோடியில் ஒருவன்” மற்றும் “காக்கி” படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ள நிலையில், இவ்விரண்டு படங்களின் முழு உரிமையை பெற்றிருக்கும் Infiniti Film Ventures நிறுவனம் மூன்றாவது முறையாக விஜய் ஆண்டனியுடன் ஒரு புதிய படத்தில் இணைகிறது. பரபர திரில்லராக தயாராகவுள்ள இப்படத்தை தமிழ்படம் தொடர் புகழ் இயக்குநர் CS அமுதன் இயக்குகிறார்.
படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது…
Infiniti Film Ventures நிறுவனத்துடன் மூன்றாவது முறையாக இணைவது, பெருமையாக உள்ளது. Infiniti Film Ventures நிறுவன தயாரிப்பாளர்கள் தரமிகுந்த, கொண்டாட்டமான படைப்புகளை தேர்ந்தெடுத்து செய்பவர்கள். கோடியில் ஒருவன் மற்றும் காக்கி படங்கள் மூலம் அது உறுதியாகியுள்ளது. இயக்குநர் CS அமுதன் என்னிடம் இக்கதையினை சொன்ன போது முற்றிலும் வாயடைத்து போனேன். தமிழ் படங்களின் குறைபாடுகளை கிண்டலடில்கும், ஸ்பூஃப் வகை படங்களிலிருந்து முற்றிலும் வேறாக ஒரு திரில்லர் கதையை அவர் படைத்திருந்தார். இக்கதையை அவர் கூறும்போது அவர் முழுதுமாக ஒளிர்ந்துகொண்டிருந்தார். அவர் கதையுடன் அந்தளவு ஒன்றியிருந்தார். இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு மிகச்சிறந்த திரில்லர் இயக்குநராக அவர் கொண்டாடப்படுவார்.
Infiniti Film Ventures நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கமல் போரா கூறியதாவது..
விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக, வசூல் நாயகனாக திகழ்கிறார். அவர் படங்கள் நல்ல விமர்சனங்களை பெறுவதுடன், வசூலிலும் அசத்துகிறது. கொலைகாரன் படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு கோடியில் ஒருவன், காக்கி, அக்னி சிறகுகள் என அவர் படங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் எதிர்பார்ப்பே அதற்கு சாட்சி. அவர் எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு விருப்ப நாயகனாக இருந்து வருகிறார். அவருடன் Infiniti Film Ventures நிறுவனம் மூன்றாவது முறையாக இணைந்தது மிக மகிழ்ச்சி. இயக்குநர் CS அமுதன் அவர்கள் தனது மாறுப்பட்ட கதை சொல்லலில், சிறந்த நகைச்சுவை படங்கள் மூலம் பெரும் கம்ர்சியல் படங்களை தந்துள்ளார். இம்முறை மாறுபட்ட களத்தில் ஒரு திரில்லர் திரைப்படத்தில் அவரை காணலாம். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப குழுவினர் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இயக்குநர் CS அமுதன் கூறியதாவது…
நடிகர் விஜய் ஆண்டனியின் புதிய படத்தில் இணைந்து, பணியாற்றும் செய்தியை அறிவிப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். அதிலும் மிகச் சிறந்த தயாரிப்பு நிறுவனமான Infiniti Film Ventures நிறுவனத்துடன் இணைவது பெரும் மகிழ்ச்சி. நகைச்சுவை படங்களிலிருந்து மாறுபட்டு இம்முறை ஒரு திரில்லர் திரைப்படத்தை இயக்கவுள்ளேன். இந்நேரத்தில் என் மீது நம்பிக்கை வைத்த நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் Infiniti Film Ventures நிறுவனத்தாருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளோம். படத்தின் தலைப்பு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
இப்படத்தினை கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் P மற்றும் Infiniti Film Ventures நிறுவன பங்கஜ் போரா ஆகியோர் தயாரிகின்றனர்.