சென்னை.
மதுர்யா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் மனோ கிருஷ்ணா தயாரிப்பில், தேவகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நான் வேற மாதிரி’. கதாநாயகியை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் நாயகியாக மேக்னா எலன் நடிக்கிறார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நரேன், மனோ பாலா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தை பற்றி இயக்குநர் தேவகுமார் கூறுகையில்..
நான் இதற்கு முன்பாக மலையாளத்தில் ‘சிக்னல்’ என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறேன். இது எனக்கு இரண்டாவது படம். இப்படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக்கொண்டு உருவாக்கப் பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையை சார்ந்ததாகும்.
நாயகி மேக்னா எலன் முதன்முறையாக கதாநாயகியை மையமாக கொண்ட படத்தில் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நரேன், மனோ பாலா, முத்துக்காளை மற்றும் புதுமுகங்கள் மனோ கிருஷ்ணா, ரமேஷ் குமார், கார்த்திக் ராஜா , தாணு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
நாயகியை மூன்று நண்பர்கள் காதலிக்கிறார்கள். மூன்று பேர் காதலையும் அவள் ஏற்றுக் கொள்கிறாள் ஏன் எதற்காக என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ்.
படத்திற்கு பரிமள வாசன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு கார்த்திகேயன், பாடல்கள் விவேகா & கார்கோ, நடனம் ஜாய்மதி. படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடந்து முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகிறது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
—