இரண்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு டோலிவுட்டில் ட்ரெண்ட் செட் செய்த அல்லு சிரிஷ்!

147

சென்னை.

தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் தனது நடிப்பில் உருவாகும், ‘பிரேம கதந்டா’ படத்திற்கான ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீட்டில் புதிய ட்ரெண்டை புகுத்தியுள்ளார். ஒரே நாளில் தனது புதிய படத்துக்கான இரண்டு ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை அவர் மகிழ்வித்திருக்கிறார். இது டோலிவுட் திரையுலகால் கொண்டாடப்படுகிறது. டோலிவுட்டில் இப்படியாக இரண்டு ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாவது இதுவே முதன்முறை.
முன்னதாக, இதேபடத்துக்காக இரண்டு ப்ரீ லுக் போஸ்டர்களை அவர் வெளியிட்டார். அதிலும் ஒரு ட்ரெண்ட் உருவாக்கியிருந்தார்.

இப்படியாக இந்தப் படத்திற்கு பல புதுமைகளை அல்லு சிரிஷ் புகுத்துவதால், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூட்டியுள்ளது. இப்போது அவர் இரண்டு ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்துள்ளது ரசிகர்களை இன்னும் துள்ளல் மனநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. படத்தைப் பற்றி மேலும் தகவல்கள் கிடைக்காதா என்ற அவர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ’பிரேம கதந்டா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய படம், தற்கால உறவுச்சிக்கல்கள் பற்றி பேசுகிறது. இன்று வெளியிடப்பட்ட இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் ஒன்று அழுத்தமான உணர்வுகளைக் கடத்துவதாகவும், இன்னொன்று நாயகன், நாயகியின் யதார்த்தமான மிரர் செல்ஃபி புகைப்படம் கொண்டதாகவும் உள்ளது.
பிரேம கதந்டா படத்தை ராகேஷ் சசி இயக்கியுள்ளார். படத்தை, GA2 பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அல்லு அரவிந்த படத்தை வழங்குகிறார்.

Allu Sirish sets another trend with two first looks

Allu Sirish has released two first looks from his movie on the same day, giving the audience glimpses of his upcoming movie. With this, the actor has set a new trend in Tollywood. Earlier, the actor also released two pre-looks, which got the audience intrigued, raising their excitement. The first look has in fact only added to it, with audiences demanding more details be revealed soon.

Titled Prema Kadanta, the movie explores a new-age relationship. One of the first looks sets an intense mood, while another shows the lead couple caught in a candid moment, taking a mirror selfie. Both the first looks have already started trending on Twitter, along with #premakadanta #allusirish and #happybirthdayallusirish. The movie has been directed by Rakesh Sashii, produced by GA2 Pictures and presented by Allu Aravind.