ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அரவிந்த் சாமி-கங்கணா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள ‘தலைவி’

191

சென்னை.

நடிகர் அரவிந்த் சாமி,-கங்கணா  ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள ‘தலைவி’ படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ‘தலைவி’  படத்தின் தமிழ் பதிப்பிற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. விரைவில் தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பின் சென்சார் தகவல்கள் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.விப்ரி நிறுவனம் சார்பில் விஷ்ணு இந்தூரி இப்படத்தை தயாரித்துள்ளார். விஜேந்திர பிரசாத் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.