சென்னை, 16 ஜுலை 2021:
கொரோனா தொற்றின் அச்சம் இன்னும் முழுமையாக மனங்களிலிருந்து விலகாத நிலையில், அதிலிருந்து விடுபடச்செய்து, உற்சாகப்படுத்துவதற்காக தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், உலகளவில் தொலைக்காட்சியில் முதன்முறையாக ‘சூப்பர் டூப்பர்’ மற்றும நட்புனா என்னன்னு தெரியுமா ஆகிய இரு நகைச்சுவை திரைப்படங்களை ஒளிபரப்பவிருக்கிறது. நகைச்சுவை, டிராமா மற்றும் கிளுகிளுப்பின் சிறப்பான கலவையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இரு திரைப்படங்களும் சண்டே சினி காம்போ நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த ஞாயிறன்று பார்வையாளர்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடிப்பது நிச்சயம். சிறப்பான கதைக்களத்தோடு நகைச்சுவையையும் சேர்த்து வழங்கும் இத்திரைக்கதைகளை கண்டு மகிழ, வரும் ஜுலை 18 ஞாயிறன்று பிற்பகல் 1:00 மணி மற்றும் 3:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை பாருங்கள்.
2019 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் டூப்பர், ஒரு நகைச்சுவை த்ரில்லர் திரைப்படமாகும். அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் துருவா, இந்துஜா மற்றும் ஷா ரா ஆகிய திறமையான நடிகர்கள் நடித்திருக்கின்றனர். சிறு குற்றங்களில் ஈடுபடும் இரு நபர்கள், தவறான ஒரு பெண்ணை கடத்தியதற்குப் பிறகு சிக்கலான சூழலில் மாட்டிக்கொள்வதை சுற்றி கதை நகர்கிறது. போதைப்பொருள் கடத்தும் ஒரு மாஃபியா கும்பலின் தலைவனை எதிர்கொண்டு சமாளிக்கும் சூழ்நிலையில் அவர்கள் தள்ளப்படுகின்றனர். அதற்குப் பின் அவர்களது வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று திரைப்படத்தின் எஞ்சிய பகுதி சித்தரிக்கிறது. பார்வையாளர்களுக்கு ஞாயிறன்று மனஅழுத்தத்திலிருந்து விடுபட்டு, ரிலாக்ஸ் செய்வதற்கு அற்புதமான படமாக இது நிச்சயம் இருக்கும்.
‘நட்புனா என்னன்னு தெரியுமா’ என்பது, சிவக்குமாரின் இயக்கத்தில் இளம் பெண்களின் மனம் கவர்ந்த கவின், ராஜு ஜெயமோகன், அருண்ராஜா காமராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்,2017 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை திரைப்படாகும். திரைப்பட இயக்குனர்கள் அழகம்பெருமாள், இளவரசன் ஆகியோரும் துணை கதாபாத்திரங்களில் இதில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த நண்பர்களாக திகழும் மூன்று பேரும், ஒரே இளம்பெண் மீது காதல் கொள்ளும்போது அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், அதிரடி திருப்பங்களையும் சித்தரிப்பதாக கதை பயணிக்கிறது. ஒரு புதிய பிசினஸ் நிறுவனத்தை தொடங்க இந்த மூன்று பேரும் முழு மூச்சோடு தயாராக இருக்கும்போது அவர்கள் எதிர்கொள்கின்ற முடிவே இல்லாத தடைகளினால் கதை இன்னும் பரபரப்பை எட்டுகிறது. அவர்களது காதல் பிரச்சனையும் இவைகளுள் ஒன்றாக இருக்கிறது. கசப்பும், இனிப்பும் கலந்த இச்சிக்கல், பார்வையாளர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் என்பது நிச்சயம்.
18, ஜுலை ஞாயிறன்று பிற்பகல் 1:00 மணி மற்றும் 3.30 மணிக்கு, நகைச்சுவையும், புதிரும் நிறைந்த இத்திரைப்படங்களை கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்யுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். தங்களது சௌகரியத்திற் கேற்றவாறு எந்த நேரத்திலும் இத்திரைப்படங்களைக் VOOT ஆப்பிலும் கண்டு மகிழலாம்.
கலர்ஸ் தமிழ் குறித்து: 2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவந்திருக்கின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும்.
பெண்களையும் மற்றும் அவர்களது குடும்பங்களையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும்.
‘இது நம்ம ஊரு கலரு” என்ற விருதுவாக்குடன் களமிறங்கியிருக்கிற கலர்ஸ் தமிழ், கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்தும் தரமான, புதுமையான நிகழ்ச்சி அமைப்புகளின் வழியாக சிறப்பான பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இதன் நிகழ்வுகள் இருக்கும். வேலுநாட்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் மற்றும் ஒரு கதை பாடட்டுமா என்பவை எங்களது சேனலில் ஒளிபரப்பான பிரபல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளாகும். வேலு நாச்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, டான்ஸ் Vs டான்ஸ், கலர்ஸ் காமெடி நைட்ஸ், ஓவியா, சிவகாமி, வந்தாள் ஸ்ரீதேவி, பேரழகி மற்றும் திருமணம், தறி மற்றும் மலர் போன்ற சமூக – குடும்ப நெடுந்தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிற, ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சிகளுள் சிலவாகும்.
…