சென்னை.
லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்கள் தயாரிக்கும் புதிய படமான 22 வது படத்தை, இயக்குனர் A.சற்குணம் எழுதி இயக்குகிறார். அதர்வா, ராஜ் கிரண் நடிக்கிறார்கள். நாயகியாக முன்னனி கதாநாயகி ஒருவர் நடிக்கிறார். ராதிகா சரத்குமார், R.K.சுரேஷ், ஜெயபிரகாஷ், துரை சுதாகர் (களவாணி 2 வில்லன்), சிங்கம் புலி, ரவி காலே (கன்னடம்). சத்ரு(கடைக்குட்டி சிங்கம் வில்லன்), பால சரவணன், ராஜ் ஐயப்பா , G.M.குமார் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
லைகா புரடக்ஷன்ஸ் தலைமை செயல் அலுவலர் திரு. G.K.M.தமிழ்குமரன் கட்டமைக்க, நிர்வாக தயாரிப்பை சுப்பு நாராயன் மேற்கொள்கிறார். இத்திரைப்படத் திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார், பெரும் வரவேற்பை பெற்ற மலையாள படமான உஸ்தாத் ஓட்டல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த லோகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட் -ராஜா முகமது, ஆர்ட் – J.K.ஆண்டனி, காஸ்ட்யூமர்-நட்ராஜ், மேக்கப் மேன்-K.P.சசிகுமாரும், Stills-மூர்த்தி மௌலியும். பாடல்கள் -கவிஞர் விவேகா, மணி அமுதவன், நடனம்-பாபி ஆண்டனி, தயாரிப்பு மேற்பார்வை – M.காந்தன், PRO – சுரேஷ் சந்திரா, ரேகா D’One. காவிரி ஆற்றுப்படுகை, வெற்றிலை தோட்டம் என பசுமையாக இருக்கும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட இருக்கிறது. எதார்த்தமான குடும்பப்பாங்கான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படம் விரைவில் ஒரே ஷெட்யூலில் பிரமாண்டமாக படமாக்கப்பட இருக்கிறது.