நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஏற்கனவே நடிகர் விஜய் பிறந்தநாளன்று ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு, தற்போது அடுத்த அப்டேட்டை வெளியிட தயாராகி வருகிறதாம். அதன்படி, ‘பீஸ்ட்’ படத்தில் வில்லனாக நடிப்பது யார் என்பது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு பற்றிய மற்றொரு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வரும் திங்கள் முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினர் வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஷ்யாவில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.