சென்னை.
அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும் ‘யூகி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. Forensic மற்றும் Kala போன்ற வெற்றிப்படங்களை தந்த Juvis Productions நிறுவனம் UAN Film House மற்றும் AAAR Productions நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறது.
‘யூகி’ படத்தில் கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இப்படத்தினை இயக்குகிறார். தென்னிந்திய நடசத்திர நடிகர்களான, பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பாக்கியராஜ் ராமலிங்கம் திரைக்கதை எழுதுகிறார், புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களுக்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, டான் வின்சென்ட் பின்னணி இசையமைக்கிறார். இதே தயாரிப்பு நிறுவனம் தயாரித்து, ஜாக் ஹாரிஸ் இயக்கிய மலையாளப் படத்தில் ‘ஜகமே தந்திரம்’ நட்சத்திரம் ஜோஜு ஜார்ஜ், நரேன் மற்றும் ஷர்புதீன் நடித்திருந்தனர். பன்மொழிகளில் தயாராகும் இப்படம் கோவிட் பொது முடக்க காலத்தில், அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் முறையாக கடைப்பிடித்து, சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படமாக்கப்பட்டது.