கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘சியான் 60’

160

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘சியான் 60’. இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

 விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘சியான் 60’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

விக்ரம் – துருவ் விக்ரம் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘சியான் 60’. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்துக்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.
கடந்த ஒரு மாதமாக முழுவீச்சில் நடைபெற்று வந்த சியான் 60 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். இதையடுத்து இப்படத்தின் பின்னணி பணிகளை தொடங்க உள்ளனர். விரைவில் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அப்டேட் வெளியாக உள்ளது.