ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

229
சென்னை:

ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் தற்போது முடிவு செய்துள்ளது. அதன்படி ஊரக வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது.