விஜய் ஆண்டனி -ஆத்மிகா நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘கோடியில் ஒருவன்’

179

சென்னை.

விஜய் ஆண்டனி ,ஆத்மிகா  நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD  ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பட  குழுவினர்களும் ,சிறப்பு அழைப்பாளர்களாக தயாரிப்பாளர் T  சிவா ,விஜய் மில்டன் மற்றும் பலர் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.

இந்த விழாவில் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் பேசியவை,

இந்த திரைப்படத்தின் கதையை பற்றி நான் ராஜா சார் அவர்களிடம் விளக்கினேன் .அதற்காக சில கோரிக்கைகளை முன்வைத்தேன் .இப்படத்திற்காக மிகப்பெரிய மக்கள் கூட்டமும் , கண்ணகி நகரில் பல லைவ் லொகேஷன்களில்  படத்தை எடுக்கப் போவதாகவும் தெரிவித்தேன். எனக்கு விஜய் ஆண்டனி சாரின் கடின உழைப்பு ,தயாரிப்பு நிறுவனத்தின் ஒத்துழைப்பும் இத்திரைப்படத்தை  விரைவில்   உருவாக்க ,சிறப்பாக உருவாக காரணமாக இருந்தது. விதவிதமான வகைகளில் பாடல்களை மிகவும் அழகாக கொடுத்துள்ளார் நிவாஸ் கே பிரசன்னா.

விஜய் ஆண்டனி கூறியவை,

நீண்ட நாட்களுக்கு பிறகு பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்தப் இந்த படத்திற்கு பத்திரிகையாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் .இந்த படத்தின் பைனல் வெர்சனை பார்த்தேன். கண்டிப்பாக இந்த படம் மக்களுக்கு பிடிக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் .நான் இளையராஜா சாரை என்னுடைய முன்னோடியாக கொண்டு இசையமைக்க துவங்கினேன் .இந்த படத்திற்கு சிறந்த பாடல்களை கொடுத்த நிவாஸ் கே பிரசன்னா அவர்களை நான் பாராட்டுகிறேன் .அவர் இன்னும் பல உயரங்களை அடைவார். இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இன்னும் சில காலத்தில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வருவார். ஆத்மிகா எனக்கு மிகவும் பிடித்த நடிகை .அவர் இந்த படத்தில் சிறந்த நடிப்பையும் , திறமையையும் காட்டியுள்ளார் .

இயக்குனர் & ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் கூறியவை,

பல தடைகளை கடந்தது இந்த கொரோன காலத்தில் திரைப்படங்கள் திரைக்கு வருகிறது. ஊடக நண்பர்கள் இப்படத்திற்கு கண்டிப்பாக உறுதுணையாக இருக்க வேண்டும். நிவாஸ் கே பிரசன்னாவின் பாடல்களை திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன். விஜயகாந்த் சாரின் பிரதி தான் விஜய் ஆண்டனி . படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் .

தயாரிப்பாளர் TD ராஜா கூறியவை,

அனந்த கிருஷ்ணன் என்னிடம் ஸ்கிரிப்டை சொன்னபோது அதில் ஏதோ ஒரு தனித்துவம் இருப்பதாக உணர்ந்தேன். இந்த மாதிரியான கதை கிட்டத்தட்ட 100லிருந்து 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்த தேவைப்படும். ஆனால் இயக்குனர் 75 நாட்களில் படப்பிடிப்பு முடித்து என்னை ஆச்சரியத்தில் தள்ளினார் .இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஒரு திறமையான இசையமைப்பாளர். இப்படத்திற்காக அவர் ஒரு அற்புதமான படைப்பை வழங்கியுள்ளார். விஜய் ஆண்டனி நிஜவாழ்க்கையிலும் ஹீரோ தான் .இந்த கொரோன  காலத்தில் தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை புரிந்துகொண்டு சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன்வந்த முதல் நடிகர் . மேலும் அவர் பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் . அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் இதுவரை பணியாற்றிய நடிகைகளில் சிறந்த நடிகை ஆத்மிகா .இந்த படத்தில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
.
நடிகை ஆத்மிகா கூறியவை,

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த மாதிரியான விழாவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இது எங்கள் படக்குழுவுக்கு முக்கியமான தருணம். கோடியில் ஒருவன் திரைப்படம் திரையரங்குகளுக்கு மக்களை வரவைத்து கொண்டாடக்கூடிய படமாக இருக்கும்.

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா கூறியவை,

இந்த படத்தில் இசையமைக்க எனக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த விஜய் ஆண்டனி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது இந்த திரைப்படம்.

தயாரிப்பாளர் G தனஞ்ஜெயன் கூறுகையில்,

‘கோடியில் ஒருவன்’ படத்தை முதன் முதலில் எனக்கு விஜய் ஆண்டனி கூறியது இன்னும் நினைவிருக்கிறது. ஒரு தனித்துவம் வாய்ந்த படமாக இது இருக்கும். தன்னை ஒரு எடிட்டராக இப்படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் விஜய் ஆண்டனி .அவர் ஒரு படத்தை உருவாக்குவதில் முழு தகுதியையும்  பெற்றுள்ளார். தயாரிப்பாளர்களை நட்பாகவும் ,அன்பாகவும் வைத்திருப்பதில் சிறந்தவர் அனந்தகிருஷ்ணன். மற்றும் திரைப்படத்தை சிறப்பாக எடுத்து முடிக்கும் திட்டத்தை வகுப்பதில் திறமைசாலி. ஆத்மிகா  ஒரு சிறந்த நடிகை மட்டுமல்லாது நல்ல மனிதநேயம் உடையவர். படத்தின் புரோமோஷன் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் இந்த திரைப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.