சென்னை.
வடிவேலு நடிக்க சுராஜ் இயக்கத்தில்‘நாய்சேகர்’ என்ற தலைப்பு, தற்போது சதீஷ் படத்துக்கு கிடைத்துவிட்டதால், வடிவேலுவின் படத்துக்கு வேறு தலைப்பை மாற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. ‘பிகில்’ படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி நடித்திருக்கிறார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கி உள்ளார். பிரவீன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, அஜீஷ் அசோக் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. நடிகர்சிவகார்த்திகேயன் மற்றும் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். அதன்படி இப்படத்திற்கு ‘நாய்சேகர்’ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க உள்ள புதிய படத்துக்கும் ‘நாய்சேகர்’ என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் அந்த தலைப்பு சதீஷ் படத்துக்கு கிடைத்துவிட்டதால், தற்போது வடிவேலு படத்துக்கு வேறு தலைப்பை மாற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இதனால் வடிவேலு நடிக்கும் படத்துக்கு ‘மீண்டும் நாய்சேகர்’, அல்லது “நம்ம வீட்டு நாய்சேகர்” ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என இவற்றுள் ஏதாவது ஒரு தலைப்பை வைக்க ஆலோசித்து வருகிறார்களாம்.