இசையமைப்பாளர் ஷபீர் நடித்திருக்கும் “This Land is Mine” எனும் பிரபல தொடர்!

177

சென்னை.

ஷபீர் பல விருதுகள்  பெற்ற பாடகர்- பாடலாசிரியர், இசை தயாரிப்பாளர், கலைஞர் மற்றும்  நிறைய வெற்றிப் பாடல்கள் மற்றும் திரைப்படங்களை  தந்த இசையமைப்பாளர்.

ஷபீர்,  இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியராக “சாகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, நீயா 2, கடாரம் கொண்டான் (பின்னணி பாடகர்)” படங்கள் மூலம் பெரும் புகழ் பெற்றவர்.  அவரது பாடல்களில் ஒன்றான “யாயும்” பாடல்  Youtube தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைத் கடந்து மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஷபீர் பங்களிப்பில், முன்னணி நட்சத்திரம் அருண் விஜய் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ள “சினம்” திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

ஷபீர் சிங்கப்பூரில்  பல  திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்த, ஒரு விருது பெற்ற நடிகர் என்பது இந்தியாவில் நம்மில் பலருக்கு தெரியாது. ஷபீர் கதாநாயகனாக ஒரு தமிழ் திரைப்படத்தையும் நடித்து  முடித்துள்ளார். தற்போது “This Land is Mine” எனும் பிரபல தொடரில் அவர் நடித்திருக்கும் பாத்திரம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  இத்தொடரின் கதையில் வரும் ஹபிபுல்லா கான் (ஷபீர் நடித்தது)  பாத்திரம் பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேயே இந்திய படையில் “The Tiger of Rangoon” அழைக்கப்பட்ட புகழ்மிகு பாத்திரம் ஆகும்

ஹபிபுல்லா ஒரு இந்திய ராணுவ அதிகாரி மற்றும் போர் வீரன், ரங்கூனில் போர் நடவடிக்கைகளில் பங்கு கொண்டவர்.  பின்னர் சிங்கப்பூர் வந்து, அங்குள்ள பிரிட்டிஷ் இராணுவ முகாமில் சுதந்திரம், ஒழுக்கம் மற்றும் அடையாளத்திற்கான போரில் சிக்கிக்கொண்டார். போரின் போது ஒரு இயந்திர துப்பாக்கி முனையில் தனது கையை இழந்தவர். இத்தொடரில் ஹபிபுல்லா கானின் கதாபாத்திர அறிமுகம் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது, அது பொதுமக்களிடமிருந்து மிகப்பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. நீண்ட நேரம் படப்பிடிப்பில் தனது ஒரு கையை மடித்து சட்டைக்குள் வைத்துக்கொண்டு, கையிழந்தவர் போல நடித்துள்ள, ஷபீர்  நடிப்பு அற்புதமாக  இருந்ததாக பாராட்டை பெற்றுள்ளது.