அற்புதமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி நடித்த அமீரா தஸ்தூரை பாராட்டிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!

161

சென்னை.

தமிழ், இந்தி மொழிகளில் நடிகராகவும், இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் வலம் வரும் பிரபு தேவா தற்போது பஹிரா என்னும் படத்தில் நடித்து இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பஹிரா. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பிரபுதேவா பேசும் போது,

‘பஹிரா’ படத்தின் தயாரிப்பாளர் பரதன் அவர்களுக்கு நன்றி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறந்த நடிகர். ஆதிக் ஒரு காட்டாறு. ஆறு வளைந்து வளைந்து சென்று ஒரு கடலில் கலக்கும். அதுபோல் தான் ஆதிக் ரவிச்சந்திரன். படத்தில் பல வேலைகளை செய்து ஒரு நல்ல படத்தை இயக்கி இருக்கிறார். முதல் படத்திலேயே சிறப்பாக இசையமைத்து இருக்கிறார் கணேஷ். நாயகி ஜனனி அழகாக இருக்கிறார், அழகாகவும் நடிக்கிறார். அப்புறம் காயத்ரியும், சாக்ஷி, அமைரா, சஞ்சிதா, சோனியா அகர்வால் அனைவரும் அழகாக நடித்திருக்கிறார்கள். காஸ்டியூம் டிசைனர் சத்யா, ஒவ்வோரு சீனுக்கும் புது புது டிரஸ் கொடுத்து அசத்தினார். படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். பஹிரா திரைப்படம் அனைவரும் பிடிக்கும் என்றார்.

இயக்குநர் ஆதிக் பேசும் போது,

அமீரா தஸ்தூர் இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மொழி அவருக்கு முழுதாக தெரியாதென்றாலும், மாஸ்டர் ( பிரபுதேவா) உடன்  அழுது நடிக்கும் உணர்ச்சிகரமான காட்சியில் தனது  அற்புதமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி, அசத்தியுள்ளார். அவர் கண்டிப்பாக சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்றார்.

அழகு தேவதை  நடிகை அமீரா தஸ்தூர் போன்ற நாயகி, முன்னணி  நடிகரான பிரபுதேவா மற்றும் அவரது அடுத்த தமிழ்ப்படமான “பஹிரா” படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் போன்றோரிடமிருந்து, நடிப்பு திறமைக்காக பெரும் பாராட்டுக்களை பெறுவது பெரும் சாதனைகளில் ஒன்றாகும். அமீரா நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக “பஹீரா” படத்தில் நடித்துள்ளார். உலகம் முழுக்கவே கொண்டாடப்படும் நடிகரான பிரபுதேவா அவர்களுடன் இணைந்து நடிப்பது, அவருக்கு  இயல்பிலேயே மிகக்கடினமாக இருந்தது. அவற்றையெல்லாம் கடந்து,  தற்போது தனது கதாப்பத்திரத்தை சிறப்பாக செய்ததாக  முன்னணி  நடிகரான பிரபுதேவா மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்  ஆகியோரிடமிருந்து, பெரும் பாராட்டுக்களை குவித்தது அவருக்கு திரைவாழ்வில் கிடைத்த பொன்மகுடமாகும்.