சென்னை.
ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகும்”புரொடக்ஷன் No.3″
தரமான படைப்புகளை தொடர்ந்து அளித்து வரும் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் அவர்களின் ஹோம் மூவி மேக்கர்ஸ் தற்போது பிரபல நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகும்”புரொடக்ஷன் No.3″ படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றது.
நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உடன் ஷா ரா, ஜப்பான் குமார், வினோதினி, பால சரவணன், யுவலக்ஷ்மி ஆகியோர் நடிக்கின்றனர்.
படத்திற்கு ஒளிப்பதிவை அகில் ஜார்ஜ் மேற்கொள்ள, ரான் ஈதன் யோஹன் இசையமைக்கிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:
தயாரிப்பு – சுஜாதா விஜய்குமார் (ஹோம் மூவி மேக்கர்ஸ்)
இயக்கம் – பாபி ஆண்டனி
ஒளிப்பதிவு – அகில் ஜார்ஜ்
இசை – ரான் ஈதன் யோஹன்
படத்தொகுப்பு – சரத்குமார்
வசனம் – பாபி ஆண்டனி, ஆண்டனி பாக்யராஜ், சவரி முத்து
கலை – தினேஷ் குமார்
காஸ்டியும் டிசைனர் – அம்ரிதா ராம் (ஆண்ட்ரியா ஜெரிமியா), நவாதேவி ராஜ்குமார்
சண்டைப்பயிற்சி – GN முருகன்
எக்சிகியுடிவ் புரொடுயுசர் – சாய்
புரொடக்ஷன் எக்சிகியுடிவ் – சக்கரதாள்வார் G
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)
இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.