சென்னை.
தா செ ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை சூர்யா – ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. .
உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கும் ப்ரைம் சந்தாதாரர்கள், தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டீஸர் வெளியீட்டுக்குப் பிறகு ரசிகர்களிடம் சரியான ஆர்வத்தை உருவாக்கியிருக்கும் நீதிமன்ற வழக்காடலை களமாகக் கொண்ட ‘ஜெய் பீம்’ திரைப்படத்தைச் சுற்றி அற்புதமான ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஜெய் பீம் புதிய போஸ்டரை வெளியிட்டு அதில் படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 22 வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் என்று குறிப்பிட்டதன் மூலம், திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பை இன்னும் ஒரு மடங்கு எகிற வைத்திருக்கிறது.
அமேசான் ப்ரைம் கூட்டத்தில் தனியாளாக உயர்ந்து நிற்கும் சூர்யாவின் சக்திவாய்ந்த தோற்றத்தை இந்தப் புதிய போஸ்டர் காட்டுகிறது. தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 2ஆம் தேதி, அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ‘ஜெய் பீம்’ ப்ரீமியர் வெளியீடாக ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. அக்டோபர் 22ஆம் தேதி படத்துக்கான ட்ரெய்லரை ஆவலுடன் எதிர்பார்த்திருங்கள்.