சென்னை.
பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது.
அதன் நிறைவு விழாவில் (17.10.21)அன்று சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை கர்ணன் திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் மாரி செல்வராஜ் பெற்றார்.
V கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி தனுஷ் கதாநாயகனாக நடித்தார் .விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, கதைக்களம், நடிப்பு, அமைப்பு, இயக்கம், மற்றும் முக்கிய தொழில்நுட்ப அம்சங்களுக்கான பாராட்டுகளை இப்படம் குவித்தது .விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது மட்டுமல்லாமல், அதிக வசூலையும் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை RK செல்வா மேற்கொண்டுள்ளார்.