சென்னை.
தரமான மற்றும் மிகச்சரியான கதைகளை ரசிகர்களுக்கு, தேர்ந்தெடுத்து அளிப்பதில் ZEE5 ஓடிடி நிறுவனம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அற்புதமான ஒரிஜினல் சீரிஸ் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் அனைத்து வயது மக்களையும், தன்பால் ஈர்க்கும் பிரசித்தி பெற்ற ஒரு ஓடிடி தளமாக ZEE5 மாறியுள்ளது.
ZEE5 உடைய சமீபத்திய திரைப்படமான ‘விநோதய சித்தம்’ டிரெய்லரை காண: https://www.ZEE5.com/videos/details/vinodhaya-sitham-trailer/0-0-1z519673
பிரம்மாண்ட வெற்றி பெற்ற, நடிகர் சந்தானம் நடித்த “ டிக்கிலோனா” திரைப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் கிடைத்த பிரமாதமான வரவேற்பை தொடர்ந்து, ZEE5 மீண்டும் ஒரு மிகப்பெரும் வெற்றிப்படைப்பை கொடுத்துள்ளது. “விநோதய சித்தம்” என்ற தனித்துவமான பெயர் கொண்ட இந்த புதிய படத்தை, விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி, முதன்மை பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
மனிஷ் கல்ரா, Chief Business Officer, ZEE5 India கூறியதாவது.
‘தரமான படங்களை தருவதே எங்கள் ZEE5-நிறுவனத்தின் முதன்மையான பணியாகும். மற்ற நிறுவனங்களை காட்டிலும் கருத்தில் சிறந்த ஒரிஜினல் சீரிஸ் மற்றும் பலவிதமான தரமான படங்களை பல்வேறு மொழிகளில் நாங்கள் தந்துகொண்டிருக்கிறோம். மற்றவர்களிடமிருந்து எங்களை தனித்து காட்டுவது இது தான். தொடர்ந்து சிறந்த தமிழ் கதைகளை ரசிகர்களுக்கு அளிப்பதன் மூலம், நாங்கள் தமிழில் தொடர்ந்து வெற்றியை சந்தித்து வருகிறோம். டிக்கிலோனா, விநோதய சித்தம் போன்ற எங்களது தளத்தில் தொடர்ந்து வெளியாகும் படைப்புகளை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருவது மகிழ்ச்சி. பல்வேறு வித்தியாசமான கதைகளை வழங்கி ரசிகர்களை தொடர்ந்து திருப்திபடுத்துவோம் என நாங்கள் நம்புகிறோம்’.
நடிகர் இயக்குநர் சமுத்திரக்கனி கூறியதாவது’
சில சம்பவங்களை பார்த்திருப்போம், சில சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம். சில சம்பவங்களுக்கு சாட்சியாக இருப்போம், ஆனால் சம்பவங்கள் நடத்தப்படுகிறது. அப்படி நடத்தப்பட்ட மாபெரும் வெற்றிச்சம்பவம் தான் “விநோதய சித்தம்”. காலத்திற்கு நன்றி’. தேசிய விருது வென்ற நடிகர் தம்பி ராமையா,முனீஷ்காந்த், தீபக் தின்கர், ஷெரினா, சஞ்சிதா ஷெட்டி, ஶ்ரீரஞ்சனி ஆகியோரின் அற்புதமான நடிப்பு படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது.படத்தில் குறிப்பிடத்தக்க வகையில், பணியாற்றியுள்ள திறமை மிகு தொழில்நுட்ப கலைஞர்களான, ஒளிப்பதிவாளர் N.K. ஏகாம்பரம், இசையமைப்பாளர் C சத்யா மற்றும் படத்தொகுப்பாளர் A.L. ரமேஷ் ஆகியோரின் பணி, படத்தில் இயக்குனர் சமுத்திரகனியின் கதை சொல்லலுக்கு மிகப்பெரும் தூணாக அமைந்துள்ளது. இப்படத்தை அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்கள், YouTuber, மீம் கிரியேட்டர்கள், விமர்சகர்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் என அனைவரும் தங்களின் இதயப்பூர்வமான ஆதரவை தந்து, ZEE5யின் ‘விநோதய சித்தம்’ திரைப்படத்தை ரசிகர்களின் விருப்ப திரைப்படமாக, பெரும் வெற்றி திரைப்படமாக மாற்றியுள்ளனர்.
நீங்கள் முழுத்திரைப்படத்தை இந்த சுட்டியில் காணலாம் : https://www.ZEE5.com/movies/details/vinodhaya-sitham/0-0-1z519672