சென்னை.
விஷால் – ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ‘ எனிமி’. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ்,மம்தா மோகன்தாஸ் ,தம்பி ராமையா , கருணாகரன் ,மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் . பாடல்களை தமன் இசையமைக்க RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .சண்டைக்காட்சிகள் – ரவிவர்மா . படத்திற்கான பின்னணி இசையை சாம் CS இசையமைக்கிறார் . படத்தொகுப்பினை ரெய்மான்ட் டெரிக் க்ரஸ்ட்டா மேற்கொள்கிறர் . எனிமி படத்தின் டீசர் , ட்ரைலர் , பாடல்கள் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது .