‘அண்ணாத்த’ படத்தின் சிறப்பு காட்சியை தன்னுடைய பேரனுடன் இணைந்து பார்த்த சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த்!

144

சென்னை.

தன்னுடைய பேரன் ஆசையை நிறைவேற்றும் விதமாக சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் பேரன், மற்றும் குடும்பத்தினர் அனைவருடனும் இணைந்து ‘அண்ணாத்த’ படத்தை பார்த்துள்ளார். இதனை அவரே தன்னுடைய மகள் சௌந்தர்யா விசாகன் அறிமுகம் செய்துள்ள ‘Hoote ‘ ஆப்-யில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம், தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் சிறப்பு காட்சியை பேரனுடன் இணைந்து பார்த்துள்ளார் ரஜினிகாந்த். இதுகுறித்து hoote -ஆப்-யில்அவர் கூறியுள்ளதாவது, ‘அண்ணாத்த’ படத்தின் டீசர் வெளியானதில் இருந்து தன்னுடைய 3 ஆவது பேரன் வேத், அவருக்கு 6 வயது தான் ஆகிறது. படத்தை எப்போ காட்டப் போறீங்க தாத்தா,  எப்போ பார்க்கலாம்… என ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 15 முறையாவது கேட்டு கொண்டே இருப்பான். நான் இன்னும் ரெடியாகவில்லை என்று சொன்னால், ஏன் ரெடி ஆகவில்லை, எப்போ பார்க்கலாம் என கேட்பான்.

இவனுக்காகவே, இயக்குனர் சிவாவுக்கு போன் செய்து, சார் கொஞ்சம் சீக்கிரம் படத்தை காட்டுங்க, பேரன் தொல்லை தாங்க முடியல என்று கூறினேன். அவரும் நீங்கள் டெல்லி சென்று வந்ததும் படத்தை போட்டு காட்டுவதாக தெரிவித்தார். தன்னுடைய மற்ற இரு பேரன்களான, யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் அவருடைய அப்பாவுடன் கொடைக்கானலில் ஷூட்டிங்கில் இருப்பதால் அவர்களிடம் சொல்ல வேண்டாம் என கூறிவிட்டேன். எனினும், அக்டோபர் 26 ஆம் தேதி தன்னுடைய மகள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மாப்பிள்ளை விசாகன், மனைவி லதா, மற்றும் சம்பந்தி வணங்காமுடி, அவரது மனைவி உஷா ஆகியோருடன் படத்தை பார்த்ததாகவும், குறிப்பதை வேத் என் பக்கத்துலயே அமர்ந்து படம் பார்க்கணும் என்று சொல்லி ‘அண்ணாத்த’ படத்தை பார்த்தான்.

அவன் பார்க்கும் என்னுடைய முதல் படம் இது.  கண்டிப்பாக இதை அவன் மறக்க மாட்டான் என்று கூறியுள்ளார். முழு படத்தையும் அவ்வளவு சுவாரஸ்யமாக பார்த்த வேத், படம் முடிந்த பின்னர் தன்னை கட்டி பிடித்து ஒரு 3 நான்கு நிமிடம் விடவே இல்லை. ரொம்ப சந்தோஷமாக தாத்து  தாத்து ஐ ஆம் சோ ஹாப்பி… தாங் கியூ சோ மச் என கூறியதாகவும், இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக கூறிய ரஜினிகாந்த், திரையரங்கை விட்டு வெளியே வரும் போது, இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக கலாநிதி மாறன் சார் வாசலில் நின்று கொண்டிருந்தார். தன்னை பார்க்க வந்ததாக அவர் கூறியதாகவும், அவ்வளவு பெரிய மனுஷன், எவ்வளோ பிஸி அங்கு அவர் வரவேண்டிய அவசியமே இல்லை. இருந்தாலும் வந்திருந்தார் மிகவும் சந்தோஷமாக இருந்தது. எப்போதும் மேல் மக்கள் மேல் மக்களே என்று பேசியுள்ளார்.