விக்ரம் நடிக்கும் ‘மகான்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது..!

153

சென்னை.

நடிகர் விக்ரமின் 60-வது படமான ‘மகான்’ ஓடிடியில் வெளியாகவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் லலித்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.  கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ‘மகான்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம். ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜகமே தந்திரம்’ திரைப்படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது நினைவிருக்கலாம்.