சென்னை.
ஜல்லிக்கட்டு மூவிஸ் பக்தியுடன் வழங்கும் படம் தேசிய தலைவர். உலகையே தன் பக்கம் திருப்பிப் பார்க்க வைத்து எழைகளுக்குக்காகவும் தன் இனத்துக்காகவும் வாழ்வையும் தன்னையும், தனது சொத்துக்களையும் அர்ப்பணித்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக தேசிய தலைவர் உருவாகிறதுஇதில் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவராக ஜே.எம் பஷீர் நடிக்கிறார். மேஸ்டரோ இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஊமை விழிகள் உள்ளிட்ட பலவேறு வெற்றிப்படங்களை இயக்கி அளித்த திரைப்படக் கல்லூரி மாணவர் ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். பாரதிராஜா, ராதாரவி, முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சினேகன் பாடல்கள் எழுதுகிறார். அகிலன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ. எம் சவுத்ரி மூலக்கதை அமைத்திருகிறார். வெங்கட் எடிட்டிங் செய்கிறார். மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைக்கிறார். மிரக்கல் மைக்கேல் ஸ்டண்ட் அமைக்கிறார். பி ஆர் ஒ டைமண்ட் பாபு. கே.எஸ்.கே செல்வா.
தேசிய தலைவர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தேவர் ஜெயந்தி தினமான அக்டோபர் 30ம் தேதி சென்னையில் நடந்தது. இதில் படக் குழுவினர் கலந்துகொண்டு பேசினார்கள்.
விழாவில் திரைப்பட இயக்குனர் ஆர்.அரவிந்தராஜ் பேசியதாவது:
இன்றைக்கு நமது கதையின் கதாநாயகன் மறைந்த தேவரய்யாவின் 114 பிறந்த நாள். இந்நாள் ஒரு சிறப்பான நாளாகும். அவர் பிறந்த நாளும் இறந்த நாளும் ஒரே நாள்.. ஒரு சிலருக்குத்தான் இந்த பாக்யம் கிடைக்கும். குருவுக்கும் சித்தருக்குதான் இதுபோன்ற நாள் கிடைக்கும் என்கிறார்கள். அவர் ஒரு சித்தராக வாழ்ந்தார். அதனால்தான் அவரது பிறந்த நாளையும் இறந்த நாளையும் தேவரின் குரு பூஜை என்று சிறப்பாக கொண்டாடி வருகிறோம். தேவர் என்று சொன்னாலே இன்றைய இளைஞர்களுக்கு தேவர் பெயர் கேள்வி பட்டிருக்கிறேன் நந்தனத்தில் சிலை இருக்கிறது. என்பது மட்டும்தான் தெரிகிறது, ஆனால் தேவரய்யா இந்திய விடுதலைக்கு அவரது பங்கு எப்படிப்பட்டது, அரசியலில் நேர்மையான, உண்மையான, தூய்மையான அரசியல்வாதியாக அவர் தன்னுடைய வாழ்க்கையை நடத்தினார் என்பதையெல்லம் இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியமான விஷயம்.
தேவரய்யா பற்றி படிக்கும்போது என் மனதில் ஒரு கேள்வி எனக்கு மட்டுமல்ல எல்லோர் மனதிலும் இருப்பது. நான் நல்லவனாகத்தான் இருக்கிறேன் நல்லவனாக இருந்து என்னத்தை கண்டேன். நல்லவனாக இருந்தால் கஷ்டம் மேல் கஷ்டம் தான் வருகிறது. என்று எண்ணுவேன். தேவரய்யா வரலாற்றை நான் படிக்கும்போது அவர் எந்தவொரு இடத்திலும் தன்னுடைய கொள்கையையோ நேர்மையையோ தூய்மையையோ கைவிட்டதில்லை. அப்போதுதான் எனக்கு ஒருபெரிய உண்மை தெரிந்தது. தேவரய்யா காலத்தில் வாழ்ந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். அதில் பலர் மறக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தேவரய்யா பற்றி இன்றளவும் நாம் கொண்டாடுகிறோம் என்றால் அவர் வாழ்ந்த உண்மையான வாழ்க்கைக்கு கிடைத்த பரிசுதான் அது. அந்த வரலாறு எந்தவிதத்திலும் சிதைந்துவிடாமல் தேசிய தலைவர் படத்தில் நன்றாக சொல்லப்பட வேண்டும் என்ற முனைப்போடு தயாரிப்பளர்கள் இருக்கிறார்கள். அதற்கு ஒத்துழைப்பும் கொடுக்கிறார்கள். அதற்கு ஒரு சிறிய உதாரணம்… இந்த படத்துக்கு யாரை இசை அமைப்பாளராக போட வேண்டும் என்ற பேச்சு வந்தபோது நான் இசைஞானி இளையாராஜா போடலாம் என்றேன். ஏனென்றால் ராஜ சார்தான் போற்றி பாடடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே என்ற பாடல் தந்தவர். இன்றைக்கு காலை கூட எல்லா இடத்திலும் அந்த பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறது. அவர் ஏற்படுத்தின அந்த வரலாற்றை உடைக்க வேண்டுமென்றால் அவரால் மட்டும்தான் முடியும் அதனால் ராஜாசார் பண்ணாதான் நல்லா இருக்கும் என்று சொன்னவுடனே அதற்கு எல்லோரும் உடன்பட்டனர். உடனடியாக ராஜா சாரைபோய் எல்லோரும் பார்த்தோம். அதற்கு நம்ம டைமண்ட் பாபு சார்தான் மிகப்பெரிய உதவியாக இருந்தார். எதற்கு இதை சொல்கிறேன் என்றால் நான் கிட்டதட்ட 15 படங்களுக்கு மேல் செய்திருக்கிறேன். நான் ராஜா சாரிடம் பண்ணுகிற முதல் படம் இது. அந்த வாய்ப்பு இந்த படத்தின் மூலமாக தயாரிப்பாளர் ஏற்படுத்தி கொடுத்தார்கள் அதற்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பாட்டை பார்த்தோம் முதல் தடவையாக ராஜா சாரோட உட்காந்து பாட்டை பார்க்கும்போது எனக்கு சின்ன உதறல்தான். அவர் ஒரு சீனியர் என்பதால்தான் இந்த உணர்வு இருந்தது. ஆனாலும் மனதில் பட்டதை சொல்லாமல் இருக்கக்கூடாது என்று சொன்னேன். நம்ம கேட்கிற விஷயங்களை கூட அவர், உனக்கும் ஞானம் இல்லடா என்று சொல்லாமல் மாற்றங்கள் செய்து கொடுத்தார். அது பெருமையாக இருந்தது. இந்த படத்தின் மற்றொரு சிறப்பான விஷயம் என்னவென்றால் நம் பஷீர் சாரின் நண்பர் சவுத்ரி என்பவர் இந்த கதையை நாம் செய்யலாம் தேவர் விழாவுக்கு நல்ல இருக்கும் என்றார். அவர் தந்த புத்தகங்களை படிக்க படிக்க எனக்குள் ஆர்வம் பெருகியது. தேவரய்யா பற்றிய படமோ, டி வி சீரியலோ செய்யணும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அது இவ்வள்வு பெரிய ஒரு பொக்கிஷமாக கிடைக்கும் என்பது இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது. அதற்கு மீண்டும் ஒருமுறை தயாரிப்பாளர்களுக்கும். பஷீர் சாருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அரவிந்தாராஜ் பேசினார்.
கதாநாயகன் ஜே.எம்.பஷீர் பேசியதாவது:
இன்று தேவரய்யாவின் குருபூஜை. அவருடைய காலடியை தொட்டு வணங்கி பேசுகிறேன். தேசிய தலைவர் படம் எப்படி உருவானது என்றால் என்னுடைய நண்பர் சவுத்ரிதான் என்னிடம் இதை கூறினார். இந்த படத்தை இயக்க அரவிந்தராஜ் சாரிடம் பேசினேன். பிறகு எனக்கு கெட்டப் போட்டு பார்க்கப்பட்டது. இதில் ஒவ்வொரு விஷயத்திலும் தேவரய்யாவின் ஆசி இருந்தது. சில சமயம் இந்த படம் நடக்க முடியாமல் போகவிருந்த நேரத்தில் எனக்காவும் தேவரய்யாவுக்காகவும் என்னுடைய நண்பர்கள் ஜல்லிகட்டு மூவிஸ் என்ற கம்பெனியை இந்த படத்துக்காக உருவாக்கினர்கள். எம்.எம்,பாபு,, எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜி.ஜெயந்தினி இணைந்து இந்த படத்தை எடுக்க முன்வந்தார்கள் எத்தனை செலவானாலும் பரவாயில்லை இந்த படத்தை எடுங்கள் என்று சொன்னார்கள்.
முதன்முதலில் டத்தோ ராதாரவியை நடிக்க வைக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கு காரணம் அவருக்கு தேவரய்யா மீது அவ்வளவு பெரிய பற்று. அதேபோல் இயக்குனர் இமயம் பாரதிராஜா சார், இசைஞானி போன்ற பெரிய ஜாம்பாவன்களை அய்யா இந்த படத்தில் தானாக சேர்த்துக்கொண்டார். இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. அய்யா சமாதிக்கு சென்று ஆசி பெற்று படத்தை தொடங்கினோம்.
தேவரை போல யாரும் பிறக்கவுமில்லை பிறக்கவும் முடியாது என்ற வரிகளை சினேகன் எழுதி உள்ளார்.அவருக்கு பட தரப்பினர் சார்பில் நன்றி. தமிழ் சினிமா வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. நான் இஸ்லாமியானாக பிறந்து சினிமாவில் நிறைய பயணித்திருக்கிறேன். எங்கும் ஒரு பெரிய ஓபனிங் கிடைக்கவில்லை. அப்போது அய்யாவின் கதாபாத்திரம் எனக்கு அமைந்தது. நூறு படம் நடித்திருந்தால் கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்காது. ஐய்யாவின் படத்தில் நடிக்க வேண்டும் என்று என் தலையில் எழுதி இருக்கிறது அதனால் நடிக்கிறேன். இஸ்லாமிய தாயின் தாய்ப்பாலை குடித்து வளர்ந்தவர் தேவரய்யா. அந்த ரத்த பாசம், ஏதோவொரு ஜென்மத்தில் நான் அவருக்கு வேலைக்காரனாக பிறந்திருக்கலாம். அதனால் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. ஐய்யாவின் மறைக்கப்பட்ட வரலாறு எங்கும் தவறு செய்யாமல் இயக்குனர் செய்திருக்கிறார். இதற்கு முழுவதுமாக ஆதரவு தந்தவர்கள் என் தயாரிப்பாளர்கள் தான். அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார்கள் இதுவரை கணக்கு பார்த்ததில்லை அதற்காக அவர்களுக்கு என் சார்பிலும் இயக்குனர் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
டத்தோ ராதாரவி பேசியதாவது:
இப்படத்தில் நாயகனாக நடிக்கும் பஷீருக்கு என்னுடைய நன்றி கூறிக்கொள்கிறேன். எல்லாவற்றையும் கடந்து எல்லோரும் தேசிய தலைவர் படத்தில் இணைந்திருக்கிறோம். இயக்குனர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையாஜா இணைந்திருப்பது வரப்பிரசாதம் இப்படத்தில் இடம் பெரும் தேவரய்யா பாடல் வைரலாகி விட்டது. சினேகன் அற்புதமாக எழுதி இருக்கிறார். என்னுடைய வீட்டில் தேவரய்யா படத்தை வைத்து கும்பிடுகிறேன். அதேபோல் என்னுடைய அப்பா அம்மா படம், பெருந்தலைவர் காமராஜர் படம் இருக்கும்.
பெருந்தலைவர் காமராஜரை முதன்முதலில் தேர்தலில் நிற்க வைத்தது ஐய்யா முத்தராமலிங்க தேவர்தான். அவரை கடத்திக் கொண்டு சென்றுவிட்டார்கள். உடனே தேவரய்யா அவர்கள் இங்கு நான் பேசி முடிப்பதற்க்குள் அபேட்சகர் (வேட்பாளர் )வரவில்லை என்றால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது என்று சிம்ப்ளாக சொன்னார். பிறகு அவர் பேசி முடிப்பதற்குள் அவரை காரில் கொண்டு வந்துவிட்டுவிட்டார்கள். அப்படியோரு மனிதார் தேவரய்யா. என் அப்பாவுக்கும் அவருக்குமே சின்ன கசப்பு ஏற்பட்டது பின்னர் அவர்கள் நல்ல நண்பர்களாகிவிட்டார்கள். முத்துராமலிங்க தேவர் அய்யா படத்தை நான் ஏன் கும்பிடுகிறேன் என்றால் அவர் ஒரு வீரம் விளைந்த மண். முத்துராமலிங்க தேவர் சாதாரணமாகத்தான் பேசுவார், மரியாதையாக பேசுவார். ரஜினிகாந்த்திடமே அவரது பேச்சை கொடுத்திருக்கிறேன். தேவரய்யா இனத்துக்கே பெரிய வீரமுண்டு. தேசிய தலைவர் படத்தில் வக்கீலாக நடிக்கிறேன். தேவரய்யாவை விடுதலை செய்ய வாதாடும் வக்கீலாக நடிக்க வேண்டுமென்றார்கள் அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நந்தனத்திலும் மதுரையில் இருக்கும் தேவரய்யா சிலையில் கம்பீரமாக இருக்கும்.
தயாரிப்பாளர் எம்.எம். பாபு பேசும்போது ,
’ தேசிய தலைவர் படத்தை மக்களிடம் கொண்டு சென்று பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.என்றார். தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, பிஆர் டைமண்ட் பாபு அனைவரையும் வரவேற்றனர். முன்னதாக படத்தில் இடம்பெறும் இசைஞானி இசையில் அற்புதமாக உருவான, ’தேவரை போல யாரும் பிறக்கவுமில்லை பிறக்க போறதுமில்லை’ என்ற பாடல் திரையிடப்பட்டது, அதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.