சென்னை.
தெலுங்கில் வெளிவந்த வெற்றிப்படமான த்ருஷ்யத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் வெங்கடேஷ் டகுபதி இப்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளிவரவுள்ள, த்ருஷ்யம் 2 படத்திலும் பங்கேற்கிறார். சுரேஷ் புரொடக்ஷன்ஸைச் சேர்ந்த ஆண்டனி பெரும்பாவூர், சுரேஷ் புரொடக்ஷனின் D. சுரேஷ் பாபு, மேக்ஸ் மூவீஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த Amazon Originals திரைப்படம் மர்மம் மற்றும் திடீர்த் திருப்பங்ககள் கொண்ட குடும்ப த்ரில்லர் ஆகும்.
நவம்பர் 25-ஆம் தேதி வெளிவரவுள்ள இந்த தெலுங்கு த்ரில்லரின் பிரத்யேக டிஜிட்டல் பிரீமியரை இந்தியாவிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள Prime உறுப்பினர்கள் ஸ்ட்ரீம் செய்யலாம். Amazon Prime Video மொபைல் பதிப்பிற்கு சந்தா செலுத்துவதன் மூலமும் வாடிக்கையாளர்கள் த்ருஷ்யம் 2-ஐப் பார்க்கலாம். Amazon Prime Video மொபைல் பதிப்பு, ஏர்டெல் ப்ரீ-பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தற்போது கிடைக்கக்கூடிய ஒற்றைப் பயனர், மொபைல் மட்டும் திட்டமாகும்.
தெலுங்கு க்ரைம்-த்ரில்லர் ’த்ருஷ்யம் 2’க்கான டிரெய்லரை Amazon Prome Video இன்று வெளியிட்டது, தெலுங்கில் வெளிவந்த வெற்றிப் படமான த்ருஷ்யத்தில் நடித்த இதில் வெங்கடேஷ் டக்குபதி தனது பாத்திரத்தை இப்படத்திலும் தொடர்கிறார். மீனா, கிருத்திகா, எஸ்தர் அனில், சம்பத் ராஜ் மற்றும் பூர்ணா உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்கின்றனர். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் சுரேஷ் புரொடக்ஷன்ஸின்D.சுரேஷ் பாபு, ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் ராஜ்குமார் சேதுபதி, மேக்ஸ் மூவிஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவரும் ’த்ருஷ்யம் 2’ நவம்பர் 25 அன்று Amazon Prime \ Video-இல் இந்தியாவிலும் உலகெங்கிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் திரையிடப்படும்.
முதல் படமான திருஷ்யம் முடிந்த இடத்திலிருந்து துவங்கும் த்ருஷ்யம் 2, ராம்பாபுவின் (வெங்கடேஷ் டக்குபதி) குடும்பம் கடந்த கால நிகழ்வுகள் பற்றிய விசாரணையால் அச்சுறுத்தப்படுவதன் தொடர்ச்சியாகப் பார்வையாளர்களை ரோலர் கோஸ்டர் பயணத்தில் அழைத்துச் செல்கிறது. வரவிருக்கும் Amazon Original திரைப்படமானது, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில் நடந்த சம்பவத்தால் பதிக்கப்பட்ட தனது குடும்பத்தை மீட்டெடுத்த குடும்பத் தலைவர் மீண்டும் ஒருமுறை அவர்களைக் காக்க முயல்வது போன்ற மிகவும் பரபரப்பான மற்றும் தீவிரமான மற்றும் கவர்ச்சிகரமான கதையில் பார்வையாளர்களை ஈர்க்கும் இந்த த்ரில்லர் இருக்கையின் நுனிக்கு பார்ப்பவர்களை இட்டு வருகிறது. இந்தியாவின் கதைகள் மற்றும் கதைசொல்லிகளுக்கான உலகளாவிய மேடையாக Amazon Prime Video மாறியுள்ளது,” என்று Amazon Prime Video இந்தியாவின் உள்ளடக்க உரிமத்துறை தலைவர் மனிஷ் மெங்கானி கூறினார்.
வெங்கடேஷ் டகுபதி கூறுகையில்:
“எங்களுக்கு இவ்வளவு அன்பையும் பாராட்டுகளையும் வழங்கிய எங்கள் ரசிகர்கள், பார்வையாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள விமர்சகர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி கூற விரும்புகிறோம். நாங்கள் பெற்ற வரவேற்பு மற்றும் த்ருஷ்யம் திரைப்படம் அடைந்த வெற்றி இதுவரை எவரும் காணாதது, மேலும் ‘த்ருஷ்யம் 2’ மூலம் இந்த வெற்றியை முன்னோக்கிக் கொண்டு செல்ல எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளித்தது. ராம்பாபு தனது குடும்பத்தைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ள நிலையில் ராம்பாபுவின் வாழ்க்கையில் அடுத்து என்ன, எப்படி நடந்திருக்கும் என்பது குறித்து எங்கள் ரசிகர்கள் கொண்டுள்ள பல கேள்விகளுக்கு இத்தொடர் திரைப்படத்தில் விடையளிக்க முயல்கிறோம்.
கதைக்களத்தில் உள்ள திருப்பங்கள் சஸ்பென்ஸை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உணர்வுப் பூர்வமான மற்றும் மேலும் உற்சாகமான பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் ‘த்ருஷ்யம் 2’ எங்கள் பார்வையாளர்களின் ஆவலை மேலும் தூண்டுவதாக அமையும். Amazon Prime Video-இல் ‘த்ருஷ்யம் 2’ ஐத் திரையிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இது உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தங்கள் குடும்பத்தினருடன் திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பை வழங்கும்” என்று வெங்கடேஷ் டகுபதி கூறினார்.
‘த்ருஷ்யம் 2′ படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான ஜீத்து ஜோசப் கூறுகையில்:
“த்ருஷ்யம் 2’ என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. திருஷ்யத்தின் தொடர்ச்சியுடன் மீண்டும் வருவீர்களா என்று பலர், பல ஆண்டுகளாக என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர். இத்தொடரை பார்வையாளர்களிடம் கொண்டு வரவேண்டும் என்று நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன், ஆனால் எல்லாவற்றுக்கும் அதற்குரிய நேரம் இருப்பதாக நான் நம்புகிறேன். கதையை எப்படித் தொடரலாம் என்று பல வழிகளில் யோசித்து, இறுதியில் எனது நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவரின் ஆதரவுடன் அந்தக் கதைக் கருவை யதார்த்தமாக மாற்ற மிகவும் கடினமாக உழைத்த பிறகு, இப்போது இந்தப் படத்தை எங்கள் பார்வையாளர்களுக்குக் கொண்டு வரத் தயாராக உள்ளேன். அவர்களின் விமர்சனங்களுக்காகக் காத்திருக்கிறேன்.Amazon Prime Video உடன் இணைவதால் பலரிடையே இப்படத்தை எடுத்துச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது., இது’ என்கிறார்.