‘உதவும் கரங்கள்’ விடுதியில் உள்ள 500 பேருக்கு உணவளித்து தனது பிறந்த நாளை கொண்டாடிய இ.வி.கணேஷ்பாபு!

164

சென்னை.

‘கட்டில்’ திரைப்பட இயக்குனரும் ஹீரோவுமான இ.வி.கணேஷ்பாபு மேப்பில் லீப்ஃஸ் புரெடெக்சென்ஸ் சார்பில், உதவும் கரங்கள்  விடுதியில் தங்கியுள்ள 500 பேருக்கும் மதிய உணவளித்து தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.

இதுகுறித்து  இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது:

மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் நமக்கு இருந்தாலே போதும். அதற்கான பணம் மற்றவர்கள் மூலமாக நமக்கு கிடைக்கும். இன்று நண்பரின் பண உதவியோடு  உதவும் கரங்கள்  விடுதிகளில் தங்கியுள்ள 500 பேருக்கு மதிய உணவளித்து எனது பிறந்தநாளை கொண்டாடினேன். தனது ஊர் எது, பெற்றோர்  யார் என்று  எதுவுமே அறியாமல்  தத்தெடுக்கப்பட்டு, பள்ளியில் படிக்கும் குழந்தைகள் தொடங்கி மேற்படிப்பு கற்கும் பிள்ளைகள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் முதியவர்கள் வரை பசியாறி நம்மை வாழ்த்தினார்கள். “ஆதரவற்றவர்கள் என்று இந்த உலகில் யாருமே கிடையாது” என்ற நிலை உருவாக நாமும் முயற்சி செய்யவேண்டும். அப்படி ஒரு சின்னஞ்சிறு முயற்சியே இது.

இவ்வாறு இ.வி.கணேஷ்பாபு கூறினார்.

இவர் இயக்கி சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்த “கட்டில்” திரைப்படம் பல்வேறு விருதுகளைப் பெற்று சர்வதேச அங்கீகாரத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

விரைவில் ஆடியோ ரிலீஸ் நடைபெற இருக்கும் கட்டில் திரைப்படத்தை திரையரங்குகளில் காணலாம்.

.