விவசாயத்தை அழிக்க நடத்தப்படும் சூழ்ச்சிகளை தோலுரித்துக் காட்டும் திரைப்படம் ‘கடைசி விவசாயி

153

சென்னை.

விவசாயி படும் கஷ்டத்தை, விவசாயத்தை அழிக்க நடத்தப்படும் சூழ்ச்சிகளையும் தோலுரித்துக் காட்டும் விதமாக இப்படத்தின் டிரெய்லர் அமைந்துள்ளது. ‘காக்கமுட்டை’  திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகி திரையுலகினரின் கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். இந்த திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருதையும் வென்று அசத்தியது. அதன் பின்னர் ‘குற்றமே தண்டனை’ மற்றும் ‘ஆண்டவன் கட்டளை’ போன்ற படங்களை இயக்கினார் மணிகண்டன். இந்த இரு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றன. இந்நிலையில் இயக்குனர் மணிகண்டன், இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் ‘கடைசி விவசாயி’. இப்படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு முதலில் இளையராஜா இசையமைத்து வந்தார் பின்னர் சில காரணங்களால் அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இதனை இயக்குனர் மணிகண்டனே தயாரித்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டது.

விவசாயி படும் கஷ்டத்தை, விவசாயத்தை அழிக்க நடத்தப்படும் சூழ்ச்சிகளையும் தோலுரித்துக் காட்டும் விதமாக இப்படத்தின் டிரெய்லர் அமைந்துள்ளது. நல்லாண்டியின் யதார்த்தமான நடிப்பும், விஜய்சேதுபதியின் நக்கல், நையாண்டியுடன் கூடிய கதாபாத்திரமும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.