‘இந்தக் கதை என்னை உலுக்கியது..இந்தப்படம் இந்த சமூகத்தை கேள்வி கேட்கும்’ சமுத்திரகனி பேச்சு!

168

சென்னை.

ரசிகர்கள் விரும்பும் வகையில் பலதரப்பட்ட வகைகளில் வித்தியாசமான வெற்றிப்படங்களை வழங்கி முன்னணி OTT தளமாக ஜீ5 வளர்ந்து வருகிறது. ‘லாக்கப்’ ‘க.பெ.ரணசிங்கம்’ ‘மதில்’  ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ ‘டிக்கிலோனா’ , ‘விநோதய சித்தம் ‘ என ஒரே நேரத்தில் விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடும் வகையில் தரமான வெற்றிப்படங்களை வழங்கி ஜீ5 ரசிகர்களை மகிழ்வித்தது.

தற்போது அடுத்த வெளியீடாக சமுத்திரக்கனி நடிப்பில்,  இயக்குனர் விஜய் எழுத்தில் , ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில்  ‘சித்திரைச் செவ்வானம் ’ – பிரத்யேகமாக ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 3ல் வெளியாகிறது. இப்படத்தின் முன் திரையிடல் பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதனையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினரை சந்தித்தனர்.

இவ்விழாவில் இயக்குநர் விஜய் பேசியதாவது…

இந்த நாள் எங்கள் எல்லோருக்கும் முக்கியமான நாள். ஒரு நல்ல கதையை கொண்டு சேர்க்க ஆதரவுடன் துணை நிற்கும் ஜீ5 நிறுவனத்திற்கு நன்றி. அவர்கள் நல்ல கதைகள் மட்டும் தான் செய்கிறார்கள். சாம் CS  இடம் எனக்கு பிடித்தது,  சின்ன படம் பெரிய படம் என இல்லாமல், எல்லா படத்திற்கும் ஒரே உழைப்பு தான். அவருக்கு நன்றி. ரீமா அவர்கள் இப்படத்தை ஒப்புக்கொண்டு, மிக அழகாக செய்து தந்ததற்கு நன்றி. அவர் கதாபாத்திரமாகவே மாறி விட்டார். பூஜாவை ‘கரு’ பட காலத்திலிருந்தே தெரியும். இந்தப்படம் செய்யும் போது,  சில்வா மாஸ்டரிடம் நான் தான் இந்தப்படத்திற்கு பூஜா சரியாக இருப்பார் என்று சொன்னேன். அவர் தனக்கு வந்த நிறைய வாய்ப்புகளை தவிர்த்து வந்தார். ஆனால் இந்தக் கதை கேட்ட பிறகு, இப்படத்தை ஒப்புக்கொண்டார். நடிப்புக்காக பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார். அவர் சினிமாவில் பெரிய இடத்திற்கு செல்வார். சமுத்திரகனி சார் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். அவருடன் தலைவி படத்தில் வேலை செய்த போது, அவர் நடிப்பை பார்த்து பிரமித்திருக்கிறேன். இப்படத்தில் காலில் செருப்பு போட்டுக்கொள்ளாமல் நடித்தார். அவருக்கு நன்றி. சில்வா மாஸ்டர் தலைவா படம் மூலம் தான் அறிமுகம். அதன் பிறகு என் எல்லா படத்திற்கும் அவர் தான் ஆக்சன் மாஸ்டர்.  அவர் ஒரு ஆக்சன் காட்சியை சாதாரணமாக செய்ய மாட்டார். கதையோடு எப்படி வருகிறது கதைக்கு என்ன தேவை என்று பார்த்து, பார்த்து செய்வார். 2015 ல் நான் எழுதி வைத்த கதையை நான் எடுக்க வேண்டுமென நினைத்த போது சில்வா மாஸ்டர் தான் ஞாபகத்திற்கு வந்தார். அவருக்குள் இயக்குநர் இருக்கிறார் என தெரியும். சின்ன எமோஷனல் காட்சிக்கும் அழுது விடுவார். மாஸ்டரை விட சிறப்பாக இப்படத்தை யாரும் செய்து விட முடியாது. அவர் இயக்குநராக இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் சமுத்திரகனி பேசியதாவது…

இந்த படத்தில் வேலை செய்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜீ5 நல்ல கதைகள் மட்டும் தேடி தேடி செய்கிறார்கள் அவர்களுக்கு நன்றி. என் தம்பி சில்வா, நானும் அவனும் எதிரெதிர் வீட்டில் தான் இருந்தோம். அவனை பல வருடங்களாக தெரியும். அப்பா படத்திற்கு, அப்பா பற்றி பேசுங்கள் என்று நிறைய பேரிடம் கேட்டிருந்தேன் அவன் பேசியதை கேட்டு அதிர்ந்து விட்டேன். அவன் அப்பா தவறி விட்ட ஏக்கத்தை, பேசியிருந்தான். இப்படத்தில் அந்த குழந்தை கை தூக்கி தன் அப்பா விரலை பிடிக்கும். அதில் நான் அப்பாவாக இருந்தேன் அவன் மகனாக இருந்தான் அவ்வளவு தான் எங்களுக்குள்ளான உறவு. இந்தக்கதை என்னை உலுக்கியது, இந்தப்படம் இந்த சமூகத்தை கேள்வி கேட்கும். இந்த படத்தில் விஜய் இருக்கிறார் என்பதே எனக்கு தெரியாது. அவன் ஒரு நல்ல ஆத்மா. பூஜா சில காட்சிகளில் நம்மையே ஸ்தம்பிக்க வைத்து விட்டார். அவர் இன்னும் பெரிய தளத்திற்கு செல்வார். ரீமா இப்போது அவரைப் பார்த்தாலும் பயமாக இருக்கும், கண்ணிலேயே பேசுவார். இதில் நடித்த குட்டீஸ் எல்லாம் சூப்பராக செய்திருக்கிறார்கள். சில்வாவின் மகன் இப்படத்தில் நடித்திருக்கிறார் அவர்களுடன் நடித்தது மகிழ்ச்சி. இன்று உங்களுடன் இணைந்து படத்தை பார்க்க போகிறேன். உங்கள் அனைவருக்கும் இந்தப்படம் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் சில்வா மாஸ்டர்  பேசியதாவது…

என் சின்ன வயதிலிருந்தே, என்னை இங்கிருப்பவர்கள் தான் என் கை பிடித்து அழைத்து சென்றிருக்கிறார்கள். நான் இயக்குநர் ஆக வேண்டும் என என்னை விட வெறியாக இருந்தவர் விஜய் தான். தெரியாத ஆட்களுக்கே உதவி செய்யும் நல்ல மனம் கொண்டவர்.  தலைவா படத்திலிருந்தே எனக்குள் இயக்குநர் இருக்கிறார் என்று ஊக்கம் தந்து, என்னை இயக்குநர் ஆக்கும் வரை உடன் நின்றவர் விஜய் தான். படம் பார்த்து கண் கலங்கி, என்னால் கூட இப்படி செய்திருக்க முடியாது என பாராட்டினார் அவருக்கு நன்றி. இந்தப்படத்தை பார்த்து நல்ல கதையென்று ஆதரவு தந்த ஜீ5 நிறுவனத்திற்கு நன்றி. இந்தப்படத்தில் அண்ணனாக, அப்பாவாக உடன் நின்று தன் சொந்தப்படம் போல் செய்து தந்தார் சமுத்திரகனி அண்ணன். அவரால் தான் இந்தப்படம் முழுமையாக வந்துள்ளது. பூஜாவை விஜய் சார் தான், பார்க்க சொன்னார், அவரைப் பார்த்தவுடன் கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று தோன்றியது. கடகடவென்று பேசிக்கொண்டே இருப்பார். கலைவாணி மேடமிடம் பயிற்சி எடுத்து கொண்டு வந்து நடித்தார். அவரிடமிருந்து இன்புட் எடுத்து, சில காட்சிகள் எடுத்திருக்கிறோம் நன்றாக நடித்திருக்கிறார். ரீமா கலிங்கல் திரைக்கதை கேட்டார்.  ஒவ்வொரு காட்சிக்கும், முன்னதாகவே தயாராகி வந்தார். திரைக்கதையில் சின்ன மாற்றம் செய்தாலும் கேட்பார் அப்போது தான் அவரே சொந்த தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறார் என தெரியும்,  மிக மிக நன்றாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிப்பால் சில காட்சிகளில் அழ வைத்து விட்டார்கள். மானசி 8 வயது பெண் கிளிசரின் போடாமலே அவளுக்கு அழுகை வருகிறது. சொல்லும் நேரத்தில் சிரிக்கிறாள் அவள் மிகப்பெரிய உயரத்தை தொடுவாள். தமிழில் பேசி, பாட்டெழுதி இசையமைக்கும் திறமை சாம் CS யிடம் இருக்கிறது. அவரது இசை அட்டகாசமாக வந்திருக்கிறது. என்னுடன் இணைந்து இப்படத்தை உருவாக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றி.  படம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.

“சித்திரைச் செவ்வானம்” திரைப்படத்தில்,  பிரபல சண்டை பயிற்சி இயக்குநர் ‘ஸ்டண்ட் சில்வா’ முதல் முறையாக இயக்குநர் பணியை ஏற்றுள்ளார்.  முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  பூஜா கண்ணன் மற்றும் ரீமா கல்லிங்கல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பூஜா, சாய் பல்லவியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு சாம் CS இசையமைப்பாளராகவும், பிரவீன் KL படத்தொகுப்பாளராகவும், ஒளிப்பதிவாளர்களாக மனோஜ் பரமஹம்சா மற்றும்  K.G . வெங்கடேஷ் பணிப்புரிந்துள்ளனர். பிரபல இயக்குனர் விஜய் அவர்கள் இப்படத்தை எழுதி வெளியிடுகிறார். A.L அழகப்பன் மற்றும் P. மங்கையர்க்கரசி இணைந்து தயாரித்துள்ளனர்.

‘சித்திரைச் செவ்வானம் ’ டிசம்பர் 3 அன்று நேரடியாக ஜீ5 OTT தளத்தில் வெளியாகவுள்ளது.