ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் சீயான் விக்ரம்!

183

சென்னை.

‘கோப்ரா’, ‘மகான்’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களை தொடர்ந்து விக்ரம் நடிக்க இருக்கும் சீயான் 61வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதையடுத்து, பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.அந்த தகவல் தற்போது உண்மையாகி இருக்கிறது.

சீயான் விக்ரம் தனது அடுத்தப் படத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படம் சீயான் விக்ரமின் 61 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை ஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது 23 ஆவது திரைப்படம். விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ஹீரோவாக சீயான் விக்ரம் நடிக்கவுள்ள இந்த புதிய படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.