சென்னை.
நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள, “விக்ராந்த் ரோணா” திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸஸ் காட்சித்துணுக்குகள் மூலம் ரசிகர்களின் பேரார்வத்தை தூண்டிவிட்ட நிலையில், தற்போது தயாரிப்பாளர்கள் ஜாக் மஞ்சுநாத், ஷாலினி மஞ்சுநாத் மற்றும் அலங்கார் பாண்டியன் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். Zee Studios வழங்கும் “விக்ராந்த் ரோணா” திரைப்படத்தில், கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, மற்றும் ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 3-D பதிப்பில், 24 பிப்ரவரி 2022 வெளியாகிறது. தயாரிப்பாளர்கள் இந்த அறிவிப்புடன் ஸ்டைலீஷ் கிச்சா சுதீப் ‘பேந்தம்’ பைக்கில் அமர்ந்திருக்கும் அழகான மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களிடம் பேராதரவை பெற்று, பெரும் எதிர்பார்ப்பை குவித்து வந்த நிலையில். படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு, ரசிகர்களை பெரும் உற்சாகத்துடன் திரையரங்கு அனுபவத்திற்கு தயராக்கியுள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் ஜாக் மஞ்சுநாத் கூறியதாவது…
“விக்ராந்த் ரோணா” திரைப்படம் 3-D பதிப்பின் வெளியீட்டு தேதியை அறிவிப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. எங்களின் ரசிகர்கள் ஆரம்பம் முதலே மிகப்பொறுமையாகவும் கனிவுடனும், எங்களிடம் மிகுந்த அன்புடனும் இருந்தார்கள். அவர்களின் உற்சாகம் மற்றும் எதிர்பார்ப்பு மிகவும் தெளிவாக இருந்தது, அது ஒரு தயாரிப்பாளருக்கான வெற்றியில் பாதியை நிறைவேற்றிவிட்டது. அவர்களிடமிருந்து அளவற்ற ஆதரவு கிடைத்ததற்கு, நான் மிகுந்த நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த படத்தின் மூலம், மர்ம-த்ரில்லர் வகையை ஒரு புதுமையான தளத்தில் மிகப்பெரிய அளவில் அறிமுகப்படுத்தி ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறோம்.
இயக்குநர் அனூப் பண்டாரி கூறியதாவது…
“விக்ராந்த் ரோணா” திரைப்படம் திரையரங்கு அனுபவத்திற்காகவென்றே உருவாக்கப்பட்டது. இதன் பிரமாண்ட உருவாக்கமும் 3-D பதிப்பு தொழில்நுட்பமும், வெள்ளித்திரையில் அனுபவிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும். நாங்கள் அறிமுகம் செய்யும், உலகின் புதிய நாயகனை, விரும்பி ஏற்று ரசிக்கும் பார்வையாளர்களைக் கொண்டிருப்பதில் நாங்கள் மிகவும அதிர்ஷ்டசாலிகள். இப்படம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரையும் கவரும் அட்டகாசமான விருந்தாக இருக்கும். பிப்ரவரி 24, 2022 அன்று உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் காண மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்.
பிரமாண்ட தயாரிப்பில், பன்மொழிகளில், ஆக்சன் அட்வென்சர் படமாக உருவாகும் “விக்ராந்த் ரோணா” திரைப்படம், 3-D பதிப்பில், 14 மொழிகளில், 55 நாடுகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை அனூப் பண்டாரி இயக்கியுள்ளார். ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர். அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பினை செய்துள்ளார். Zee Studios இப்படத்தினை வழங்குகிறது. B. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசிய விருது வென்ற சிவக்குமார் படத்தின் கலை இயக்கம் செய்துள்ளார். கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, மற்றும் ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.