“அன்பறிவு” படத்தில் ஏராளமான பொழுதுபோக்குகள் அம்சங்கள் இருக்கும்” – நடிகை காஷ்மீரா பர்தேஷி!

175

சென்னை.

தமிழ் திரையுலகில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தின் மூலம், அறிமுகமான நடிகை காஷ்மீரா பர்தேஷி, தன் அழகான தேவதை தோற்றம், துறுதுறு நடிப்பால், தமிழ் நாட்டு இளைஞர்களின் இதயம் கொள்ளை கொண்ட நாயகியாக மாறிவிட்டார். தற்போது நடிகர்  ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில்  ஜனவரி 7, 2020 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘அன்பறிவு’ படத்தில் தானும் ஒரு நாயகியாக பங்கு கொண்டதில் பெரும் உற்சாகத்தில் உள்ளார்.  சமீபத்தில் அவரது நடிப்பில் கன்னடத்தில் வெளியான ‘ரைடர்’ படத்தில் அவரது அற்புத நடிப்பிற்காக குவிந்து வரும் பாராட்டுக்களால், மேலும் உற்சாகத்தில் மிதந்து வருகிறார்.

இது குறித்து நடிகை காஷ்மீரா பர்தேஷி கூறும்போது:

2021ஆம் ஆண்டு இன்பம் தரும் பல  நல்ல செய்திகளுடன் முடிவடைவதில்,  சினிமா துறையில்  உள்ள அனைவரையும் போலவே நானும் மகிழ்ச்சி அடைகிறேன். சமீபத்தில் நான் கன்னடத்தில் நடித்து வெளியான ‘ரைடர்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, அன்பறிவு படத்தின் விஷுவல் புரோமோக்கள் மற்றும் பாடல்களில் என்னுடைய காட்சிகளுக்கு கிடைத்துள்ள வரவேற்பால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த படத்தில் என்னை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்களான T.G.தியாகராஜன் சார், அர்ஜுன் தியாகராஜன் சார் மற்றும் செந்தில் தியாகராஜன் சார் ஆகியோருக்கு நன்றி. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குனர் அஸ்வின் ராம் அவர்களுக்கு நன்றி.  மிகவும் திறமை மிக்க  மற்றும் அனைவருக்கும் ஊக்கமளிக்க கூடிய  ஒருவரான ஹிப்-ஹாப் தமிழாவுடன் திரையைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி. இப்படத்தின் மொத்த படக்குழுவுடன் இணைந்து பணிபுரிந்தது மிகவும் அற்புதமான அனுபவம். ஒரு ரசிகர் என்ற முறையில், குடும்ப பொழுதுபோக்குகள் இந்தக் காலத்தின் தேவை என்று உணர்கிறேன். குறிப்பாக, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மூலம் எங்கள் படம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைவதால், குடும்ப பார்வையாளர்கள் அன்பறிவு திரைப்படத்தை அனுபவிக்கவும் ரசிக்கவும் முடியும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இயக்குநர் அஸ்வின் ராம் எழுதி இயக்கியுள்ள அன்பறிவு திரைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார், மேலும் காஷ்மீர் பர்தேஷி மற்றும் ஷிவானி  ராஜசேகர்  நாயகிகளாக நடித்துள்ளனர். நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத், விதார்த், தீனா, அர்ஜை, சரத் ரவி, வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங் களில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களில் மாதேஷ் மாணிக்கம் (ஒளிப்பதிவு), பிரதீப் E ராகவ் (எடிட்டிங்), SS மூர்த்தி (கலை), பிரதீப் தினேஷ் (ஸ்டன்ட்), பொன் பார்த்திபன் (உரையாடல்கள்), பூர்ணிமா ராமசாமி (ஆடை வடிவமைப்பாளர்), மற்றும் ஷெரீப். (நடன இயக்குனர்) ஆக பணியாற்றியுள்ளனர்

சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் இந்தப் படத்தை வழங்குகிறார். அன்பறிவு படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். G சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர் இந்தப் படம், ஜனவரி 7, 2022 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.