தமிழ்-தெலுங்கு இரு மொழிகளில் பள்ளி மாணவராக தனுஷ் நடிக்கும் புதிய படம் ‘வாத்தி’

131

சென்னை.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனையடுத்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷ், ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் வாத்தியாராக நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ‘3’ படத்திற்குப் பிறகு மீண்டும் பள்ளி மாணவராக தனுஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சூர்யதேவரா நாக வம்சியின்  சித்தாரா  என்டர்டெயின்மெண்ட்ஸ் இந்தப் படத்தை சாய் சௌஜன்யாவுடன் (ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்) தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ள இப்படத்தில் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சாய் குமார், தணிகெல்லா பரணி மற்றும் , நர்ரா ஸ்ரீனிவாஸ்  பலர் நடிக்கிறார்கள். சூது கவ்வும், சேதுபதி, தெகிடி, மிஸ்டர் லோக்கல், மாறா போன்ற படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் நவின் நூலி இப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் .பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறர்.

எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி
தயாரிப்பு நிறுவனம் : சித்தாரா  என்டர்டெயின்மென்ட்ஸ்  & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
தயாரிப்பாளர்கள்: நாக வம்சி .S – சாய் சௌஜன்யா
நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ். வெங்கடரத்தினம் (வெங்கட்)
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா
எடிட்டர்: நவின் நூலி
ஒளிப்பதிவாளர் : தினேஷ் கிருஷ்ணன்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
வழங்குபவர்: PDV பிரசாத்
மக்கள் தொடர்பு : லக்ஷ்மி வேணுகோபால் ,  ரியாஸ் கே அஹ்மத்