ஜீவிதா ராஜசேகர் இயக்கத்தில் கணவர் ராஜசேகர், மகள் ஷிவானி இணைந்து நடிக்கும் புதிய படம் “சேகர்”

149

சென்னை.

ஆங்ரி ஸ்டார் ராஜசேகர் நாயகானாக நடிக்கும்  91வது படமான ‘சேகர்’ திரைப்படத்தில், அவரது மூத்த மகள் ஷிவானி ராஜசேகர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். புதுமையான த்ரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஹீரோவின் மகளாக நடிக்கின்றார். வெள்ளித்திரையில் அப்பா-மகள் ஜோடியாக நடிப்பது இதுவே முதல் முறை. திங்களன்று, படத்தின் தயாரிப்பாளர்கள் இவர்கள் இரண்டு பேரும் இடம் பெற்ற ஸ்டில்களை ரசிகர்களுக்காக வெளியிட்டனர்.

ஜீவிதா ராஜசேகர் படத்தினை இயக்குவதோடு படத்தின் திரைக்கதையையும்  எழுதியுள்ளார், பீரம் சுதாகர ரெட்டி, ஷிவானி ராஜசேகர், ஷிவாத்மிகா ராஜசேகர் மற்றும் பொக்ரம் வெங்கட ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இணைந்து Pegasus Cinecorp, Taurus Cinecorp, Sudhakar Impex IPL, மற்றும் Tripura Creations சார்பில் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இந்த திரைப்படம்  பற்றி ஜீவிதா ராஜசேகர் கூறுகையில்..,

இத்திரைப்படத்தில் ராஜசேகருக்கும் ஷிவானிக்கும் இடையேயான காட்சிகள் ரசிகர்களுக்கு பெரிய ஈர்ப்பை தரும் வகையில் இருக்கும். அவர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே தான் படத்திலும் வருகிறார்கள். படத்தின் காட்சிகள் அனைத்தும் வெகு இயல்பானதாகவும் அவர்களின் நடிப்பும் தத்ரூபமாக இருப்பதில்  நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். படத்தின் முதல் காட்சித்  துணுக்கும், ‘லவ் காண்டே’ பாடலும்  பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் அனைத்து அம்சங்களும் ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பாக இருக்கும். படத்தின் போஸ்ட் புரொடக்‌சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

இப்படத்தில் டாக்டர் ராஜசேகர், ஆத்மிய ராஜன், ‘ஜார்ஜ் ரெட்டி’ புகழ் முஸ்கான் குப்சந்தனி, ஷிவானி ராஜசேகர், அபினவ் கோமதம், கன்னட கிஷோர், சமீர், பரணி, ரவிவர்மா, ஷ்ரவன் ராகவேந்திரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கலை இயக்கம்: சம்பத், எழுத்தாளர்: லட்சுமி பூபாலா, ஒளிப்பதிவாளர்: மல்லிகார்ஜுன் நரகனி, இசையமைப்பாளர்: அனுப் ரூபன்ஸ், தயாரிப்பாளர்கள்: பீரம் சுதாகர ரெட்டி, ஷிவானி ராஜசேகர், ஷிவாத்மிகா ராஜசேகர், போகரம் வெங்கட ஸ்ரீனிவாஸ், திரைக்கதை, இயக்கம்: ஜீவிதா ராஜசேகர்.