புரட்சிகரமான வக்கீல் வேடத்தில் வனிதா விஜயகுமார் நடிக்கும் ‘சிவப்பு மனிதர்கள்’

173

தனி மனித உணர்வையும் தற்காப்பு சட்டத்தையும் விரிவாகப் பேசும் ‘சிவப்பு மனிதர்கள்’

BTK FILMS சார்பில் B.T அரசகுமார் M.A அவர்கள் தயாரிப்பில் அன்பு சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சிவப்பு மனிதர்கள்’. சமூக கருத்து பேசும் பொழுதுபோக்கு திரைப்படங்கள் மக்களிடம் வரவேற்பு பெறுவதோடு, சமூகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி இந்திய திரையுலகில் இதுவரை சொல்லப்படாத சட்டத்தின் மறுபக்கத்தை சொல்லி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்த இருக்கிறது வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிவப்பு மனிதர்கள்’ திரைப்படம்.

ஜாதி மதம் இனம் மொழி கடந்த அபூர்வமான உணர்வு காதல், இங்கு இணைந்த காதலர்களை விட பிரிந்தவர்கள் தான் அதிகம். ‘சிவப்பு மனிதர்கள்’ படத்திலும் காதலை, காதல் சார்ந்த உணர்வுகள் எதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. பல எதிர்ப்புகளை கடந்து காதலர்கள் இணைய நினைக்கையில் பல தடைகள் பல கொலைகள் கடந்து போகிறது. இறுதியில் நீதிமன்றத்தை நாட நீதிமன்றத்தில் விருவிருப்பான தீர்ப்பு அனைவரையும் வியக்க வைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் புரட்சிகரமான வக்கீல் வேடத்தில் வனிதா விஜயகுமார் மற்றொரு வக்கீலாக லிவிங்ஸ்டன் நடிக்க நீதிபதியாக சமீபத்தில் மறைந்த கவிஞர் பிறைசூடன் நடித்துள்ளார். மற்றும் கதையின் நாயகனாக ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகியாக கருப்பசாமி குத்தகைதாரர் மீனாட்சி மற்றொரு இளம் ஜோடியாக புதுமுகம் சத்யா அனு கிருஷ்ணா நடிக்க கஞ்சாகருப்பு, ராஜசிம்மன், சோனா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பிக் பாஸ் ரேஷ்மா, சந்தியா, பெஞ்சமின், வேல்முருகன், ஆதேஷ் பாலா, சின்ராசு, லேகா ஸ்ரீ, உமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சீனுவாச கதிர் கலை இயக்குநராக பணியாற்ற, எம் தங்கபாண்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.என்.ராஜ் கீர்த்தி படத்தொகுப்பு செய்ய, விஜய் மந்தாரா இசையமைத்துள்ளார், கவிஞர் விவேகா, இயக்குநர் அன்பு சரவணன் பாடல்கள் எழுத, ரவி தேவ், பவர் சிவா நடனம் அமைத்துள்ளனர். தீப்பொறி நித்யா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

’சிவப்பு மனிதர்கள்’ திரைப்படத்தில் நீதிமன்றக் காட்சி ஹைலைட்டாக இருக்கும் என்று கூறிய படக்குழுவினர், படத்தின் டப்பிங் பணிகள் நிறைவுபெற்று பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், வரும் பிப்ரவரி மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.