சென்னை:
நகர்ப்புறங்களுக்கு நன்மை செய்ய விரும்பும் இந்த நல்ல மனிதர்களை நம்பி வாக்களியுங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களின் 5-வது கட்ட பட்டியலை வெளியிடுகிறேன். நகர்ப்புறங்களுக்கு நன்மை செய்ய விரும்பும் இந்த நல்ல மனிதர்களை நம்பி வாக்களியுங்கள். திறமைக்கு வாய்ப்பு அளியுங்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 5-வது பட்டியலில் இடம் பெற்றுள்ள சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
அவர்கள் போட்டியிடும் வார்டு எண் அடைப்புக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நித்யஸ்ரீ (2), முகம்மது பாட்ஷா (5), உஷாராணி (8), நதியா (13), சித்ரா (14), சாந்தா மகாலட்சுமி (20), பாலாஜி (29), தினேஷ்குமார் (36), ரேகா சதாசிவன் (37), சரவணன் (40), உஷாரா ணி (43), பாலகிருஷ்ணன் (48), இக்னேஷியஸ் (50), சந்திரசேகர் (52), விஜயகுமார் (58), ஸ்ரீதேவி (71), சண்முகம் (73), கோகிலா (75), உஷாராணி (76), எழிலரசி பாலாஜி (81), கனிஜா ராஜேஷ் (83), சுரேஷ் (110), ஆஷா (112), இந்திரா (125), பிரபாகரன் (133), ஜான் சாலமன் (142), மாறன் (156), மாரியம்மாள் (157), முனீஷ்வரி (158), சோனியா (159), கீதா (162), முத்துமாரி (163), காயத்ரி அனுராதா (164), தம்பிதுரைச்சி (171), ஜெயமாலா (188), ஏழுமலை (193), ராஜலிங்கம் (195), சுதாநந்தன் (198).
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 5-வது பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆவடி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:- அவர்கள் போட்டியிடும் வார்டு எண் அடைப்புக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சதீஷ் (2), தாஜ்ஜின் நிஷா(22), விக்டர் ஜான்சன் (30), குணசீலன் (37).
தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:- அவர்கள் போட்டியிடும் வார்டு எண் அடைப்புக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டியப்பன் (5), தாமோதரன் (7), சந்திரன் (8), ஸ்டீபன்ராஜ் (10), சரவணன் (22), ரோஹித் ராஜ் (23), விஜி (24), தினேஷ் பாஸ்கர் (25), தேவிகா முத்து (26).