மார்ச் மாதம் 25-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் படம் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’

153

சென்னை.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தின் அடுத்த பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டிருந்த சமயத்தில் மார்ச் மாதம் 25-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகுமென அறிவித்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது படக்குழு. இந்நிலையில், ‘டான்’ படத்தின் அடுத்த பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகளில் ஆதித்யா குரலில் இப்பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்கள் ‘டான்’  படத்திற்காக மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். வண்ணமயமான மோஷன் போஸ்டருடன் வந்த முதல்  அறிவிப்பு, அதைத் தொடர்ந்து படத்தில் பங்குகொள்ளும் நட்சத்திர நடிகர்களின் அணிவகுப்பு, அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இசைக் கொண்டாட்டத்தை தந்த, முதல் சிங்கிள் ‘ஜலபுல ஜங்கு’ பாடல் என இப்படத்தின் ஓவ்வொரு அம்சமும் படத்தின்  எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்தியுள்ளது. தற்போது  இறுதியாக, தயாரிப்பாளர்கள் அந்த அறிவிப்பை வெளியிட்டு விட்டனர்.

‘டாக்டர்’ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து திரையுலகில் அடுத்த கட்டத்தை நோக்கி  ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ள சிவகார்த்திகேயனின் நட்சத்திர அந்தஸ்து, உலக ரசிகர்களின் விருப்பமிகு படமாக உருவாகியுள்ள ‘டான்’  திரைப்படத்திற்கான வர்த்தக வட்டாரத்தில்  பெரும் எதிர்பார்ப்பையும், மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.