நடிகர் விஜய், புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று, அவரது சமாதியில் கற்பூர ஆரத்தி காட்டி  அஞ்சலி!

182

சென்னை.

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன் ஆவார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 29-ந்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு குடும்பத்தினர் மட்டுமின்றி திரையுலகினர், ரசிகர்கள் என ஒட்டு மொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. முன்னதாக புனித் ராஜ்குமார் ஜேம்ஸ் என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் தான் மரணம் அடைந்தார். இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபின், நடிகர்கள் ரஜினி, பிரபு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா, விஷால் உள்ளிட்ட பலர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும்  நடிகர் விஜய், புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று, புனித் ராஜ்குமார் சமாதியில் கற்பூர ஆரத்தி காட்டி  அஞ்சலி செலுத்தி இருக்கிறார். இந்நிலையில் புனித் ராஜ்குமார் இறுதியாக நடித்த ‘ஜேம்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வந்தது.  புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த படம் என்பதால் ரசிகர்கள் இதனை கண்கலங்கி பகிர்ந்து வருகின்றனர். இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.