R.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கும் ஹாரர் காமெடி திரைப்படம்!

152

சென்னை.

Masala Pix  நிறுவனம் சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர்  ஆர்.கண்ணன், Focus Films நிறுவனத்துடன் இணைந்து “Production no 7” படத்தை டைரக்ட் செய்து தயாரிக்கிறார்.‘ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன்காதலை’, ‘சேட்டை’, ‘இவன்தந்திரன்’, போன்று எல்லா வகை கதைகளையும் டைரக்ட் செய்து அனைவருக்கும் பிடிக்கும் தரமான வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து தந்து வருபவர்  இயக்குநர் R.கண்ணன்.

தற்போது, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான #கிரேட்இந்தியன்கிச்சன் படத்தை தமிழில் டைரக்ட் செய்து ரிலீஸ் செய்ய தயார் நிலையில் வைத்துள்ளார். மும்பை தயாரிப்பு நிறுவனம் ஒன்று இதை தயாரித்துள்ளார்கள். இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார். இதை அடுத்து, மிர்ச்சி சிவா, யோகிபாபு, கருணாகரன், பிரியா ஆனந்த் நடிக்கும் ‘காசேதான்கடவுளடா’ படத்தை டைரக்ட் செய்துள்ளார்.

அடுத்ததாக, இன்று குடும்பங்கள் அனைவரும் விரும்பி பார்க்கும்  சயின்பிக்சன், ஃபேண்டஸி வகையில் காமெடி ஹாரர் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நாயகியாக  ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் R.கண்ணன் ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து  இப்படத்தை உருவாக்குவது குறிப்பிடதக்கது.  தமிழ் சினிமாவுக்கு புதியதாகவும்,  ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாகவும் இப்படம் இருக்கும். ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் நேத்ரா எனும்  இளம் அறிவியல் விஞ்ஞானி  பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக சென்னை ECR-ல்   ஒரு பிரமாண்டமான சயின்ஸ் லேப் ஒன்றை  பெரும் பொருட்செலவில் அமைக்கிறார்கள். இப்படத்திற்காக, தலை சிறந்த அனிமேஷன் கம்பெனியுடன் இணைகிறார் ஆர்.கண்ணன்.

இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் செய்கிறார். வசனத்தை சித்தார்த் சுபாவெங்கட் எழுதுகிறார். கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். மக்கள் தொடர்பு: ஜான்சன்.

படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கிறார் இயக்குநர் R.கண்ணன். இப்படத்தின் படக்குழுவினர் கலந்துகொள்ள பூஜையுடன் ஆரம்பமானது. பைனான்சியர் மகேந்திரா நிஹார் காமெராவை ஆன் செய்ய படபிடிப்பும் இனிதே துவங்கியது. 2022 ஆகஸ்ட் 15 வெளியீடு.

R.Kannan to direct Hansika in a science -fiction , fantasy, horror comedy.

On behalf of Masala Pix production banner in a joint collaboration with Focus Films,
R.Kannan is all set to direct and produce “Production No 7”. R.Kannan is one of the directors in Tamil who has a versatile filmography like Jayamkondan, Kanden Kaadhalai, Settai and Ivan Thanthiran that were embraced widely by the audience. As his upcoming directorials, The Great Indian Kitchen is all set to release and with his other film Kaasedhaan Kadavulada in its post-production stage, R.Kannan will now be helming a sci-fi fantasy, horror comedy film that will have Hansika Motwani in lead role. This will be a unique storyline for the audience and will be a new experience.

Hansika plays the character of Nethra, a young scientist for which the makers have erected huge sets of a biology lab on ECR. Kannan has also collaborated with a VFX company for the project . Balasubramaniem handles the camera work while dialogues will be penned by Siddharth Subhavenkat. Kabilan Vairamuthu is the lyricist. PR work will be handled by Johnson. The official pooja of the film took place today. Financier Mahendra Nihar switched on the camera for the first shot of the film. This project will release on
August 15, 2022.