சென்னை.
ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன்-1” வருகிற 2022 செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனுடன் இப்படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணி ரத்னம் இயக்கி வருகிறார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதை “பொன்னியின் செல்வன்”. இது அனைவரும் அறிந்ததே. இதைத் திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சோழப் பேரரசின் பொற்காலம் துவங்கும் இந்தக் கால கட்டத்தைத் திரைக்குக் கொண்டு வர ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உழைத்து வருகின்றனர்.
மேலும் அடுத்தடுத்து செய்திகள் வெளிவரும்
Cast
Vikram
JayamRavi
Karthi
Aishwarya Rai Bachchan
Trisha
AishwaryaLekshmi
SobhitaDhulipala
Prabhu
SarathKumar
Jayaram
PrakashRaj
Jayachitra
Rahman
VikramPrabhu
AshwinKakumanu
Lal
Parthiban
RiyazKhan
Crew
Director – Mani Ratnam
Produced By – Madras Talkies
Produced By – Lyca Productions
Music – AR Rahman
Cinematographer – Ravi Varman
Production Design – Thota Tharrani
Dialogues – Jeyamohan
Executive Producer – Siva Ananth
Choreography – Brinda
Costume – Eka Lakhani
HMU – Vikram Gaikwad
Jewellery – KishanDas Jewellery
VFX – NYVFXWaala
DI – Red Chillies Color
PRO: Johnson
OTT Platform – Prime Video In