நடிகர் கதிர் நடிக்கும் ‘இயல்வது கரவேல்’ – புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை நடைபெற்றது!

149

சென்னை.

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கல்லூரி மாணவனாக நடித்த கதிர், மீண்டும் முழுக்க முழுக்க கல்லூரியை கதைகளமாக கொண்ட புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.  சென்னையின் பழமை வாய்ந்த கல்லூரியில் நடக்கும் காதல் மற்றும் மாணவர்கள் அரசியலை அடிப்படையாக கொண்ட  இந்த படத்திற்கு ‘இயல்வது கரவேல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர், ‘எஸ். எல். எஸ். ஹென்றி’ எழுதி இயக்கும் இப்படத்தை எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் டேனியல் கிரிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக நம் அனைவருக்கும் அறிமுகமான யுவலக்ஷ்மி முதல் முறையாக இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் ‘மாஸ்டர்’ மகேந்திரன், கரு. பழனியப்பன், ஆடுகளம் நரேன், ஸ்மைல்சேட்டை அன்புதாசன், லகுபரன் போன்றோர் முக்கிய கதாபத்திரங்களில் நடிக்கிறார்கள் . இப்படத்திற்கு ஜிப்ரான் இசைஅமைகிறார் . ஒளிப்பதிவாளராக ‘பரியேரும் பெருமாள்’ ஸ்ரீதர், கலை இயக்குனராக மாயப்பாண்டி, படதொகுப்பாளராக தியாகு மற்றும் மக்கள் தொடர்பாளராக ரியாஸ் கே அஹ்மத் ஆகியோர் இணைந்திருப்பது இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படத்தின் இயக்குனர் “இன்று நேற்று நாளை” இயக்குனர் ரவிக்குமார் மற்றும்   “அண்ணனுக்கு ஜே” இயக்குனர் ராஜ்குமாருடனும்  சினிமா பயின்ற மாணவர் என்பதால் அவர் இப்படத்திற்காக பெரும் ஆய்வு மேற்கொண்டதாகவும் ,கல்லூரி மாணவர்கள் அரசியல் பற்றி பல்வேறு விஷயங்களை இப்படம் பேசும் என்றும்  தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த மாதம் படபிடிப்பு தொடங்க உள்ளது. திண்டிவனம், புதுச்சேரி மற்றும் வடசென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது .

 Shooting commences with Pooja for Actor Kathir’s new movie titled ‘Iyalvathu Karavel’ in Chennai today.

Kathir, who acted as a college student in the critically acclaimed film ‘Pariyerum Perumal’, is all set to star again in a new film set entirely on a college backdrop. The film is titled ‘Iyalvatu Karavel’ and is based on love and student politics at the oldest college in Chennai. Debut Director S.L.S. Henry has  Written and directed the film that’s being produced by Daniel Christopher and Tennilavan on behalf of Eminent Entertainments production company.

Yuvalatchumi, who was introduced to all of us as a child artist, is making her debut as a heroine in this film.Also starring in the film are ‘Master’ Mahendran, Karu. Palaniappan, Aadukalam Narain, ‘Smile Settai’ Anbudasan, Lagubaran in prominent roles. Ghibran is composing the music for the film. The collaboration of cinematographer ‘Pariyerum Perumal’ Sridhar, art director Mayapandi, cinematographer Thiagu and PRO Riaz K Ahmed has raised expectations for the film.

The production company said that the film’s director had studied cinema with Director Ravikumar of Indru Netru Naalai fame and Annanukku Jey Director Rajkumar and that he had done a great deal of research for the film and that college students would talk about various things about politics. Filming is set to begin this month as preliminary work on the film is nearing completion.  The shoot is set to take place in Tindivanam, Pondicherry and North Chennai.