கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகும் இயக்குனர் மற்றும் நடிகர் “உபேந்திரா” நடிப்பில் புதிய படம்!

168

சென்னை.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய,இசை லேபிள் நிறுவனமான  “Lahari Music” நிறுவனம் “Lahari Films LLP” என்ற பெயரின்  கீழ் திரைப்படத் தயாரிப்பில் கால் பதிக்கிறது. இந்நிறுவனம்  “Venus Enterrtainers” உடன் இணைந்து, பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் “உபேந்திரா” நடிப்பில் ஒரு புதிய படத்தினை தயாரிக்கவுள்ளது. நடிகர் உபேந்திரா விமர்சன ரீதியில் பாராட்டுக்களை குவித்த அவரின் அசாதாரண படைப்புகளான “ஷ்ஷ்”, “ஏ”, போன்ற திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றிகளால், திரையுலகில் மிகவும் புகழ் பெற்றவர். அவரின் படங்கள் தென்னிந்திய திரையுலகில்  கிளாசிக்கல் மெகா ஹிட்களாக கொண்டாடப்படுகிறது.

தற்போது இந்த கூட்டணி இந்திய அளவில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கன்னடம், இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய 4 இந்திய மொழிகளில்  பான்-இந்திய திரைப்படத்தினை உருவாக்கவுள்ளனர். பாகுபலி, YRF , மற்றும் புஷ்பா திரைப்படத்தின் சமீபத்திய இந்திய அளவிலான  வெற்றி, பெயரிடப்படாத இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லஹரி மியூசிக் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான G.மனோகரன் கூறுகையில்…,

கடந்த 25 வருடங்களாக இசைத் துறையில் இணைந்து பணியாற்றிய பிறகு, இந்த சங்கமம் இப்போது  நடக்க வேண்டுமென காத்திருந்ததாக கருதுகிறேன். லஹரி மியூசிக், நடிகர் உபேந்திரா அறிமுகமான “ஏ” படத்தின் இசை உரிமையை பெற்றது, அப்படம் தென்னிந்திய திரையுலகில்  மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மற்றும் 90களின் பிற்பகுதியில் ஒரு கல்ட் கிளாசிக் படமாகவும் மாறியது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அவரது ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்திய பார்வையாளர்களும் அவரது திரைப்படங்களை அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றார்.

Venus Enterrtainers உரிமையாளர் ஸ்ரீகாந்த் KP கூறுகையில்..,

“டகரு” மற்றும் “சலகா” போன்ற வெற்றிகரமான பிளாக்பஸ்டர் படங்களை ஒரு தயாரிப்பு நிறுவனமாக தந்த வகையில், கடந்த இருபது வருடங்களில் நாங்கள் அவருடன் பல்வேறு நிலைகளில் பல்வேறு திரைப்படங்களில் இணைந்து  பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். “உபேந்திரா ஜி” போன்ற தொலைநோக்கு உடைய ஒரு கலைஞருடன் இணைந்து பணியாற்றுவது பெருமை.  அவரது திரைப்படங்கள் எப்போதும் மக்களை கவரும் வண்ணம் இருக்கும், மேலும் இந்த புதிய இந்திய அளவிலான முயற்சியை இந்திய முழுவதிலுமுள்ள  பார்வையாளர்கள் விரும்புவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

பிரபல  இயக்குனர் மற்றும் நடிகர் உபேந்திரா கூறுகையில்..,

பெரிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த  பான்-இந்தியன் படத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சி.   சிந்தனையைத் தூண்டும் வகையிலான  சினிமா அனுபவத்தை ஒட்டுமொத்த இந்தியப் பார்வையாளர்களும் விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். “உபேந்திரா” என்ற சகாப்தத்தை உருவாக்கியதே ரசிகர்கள்தான், 33 வருடங்களாக திரைக்கதை வசனம் எழுதிய ரசிகர்களின், விசில் மற்றும் கிளாப்ஸ் மூலம் தான்  நான் எப்போதும் இயங்கி வருகிறேன். இந்தியத் திரைப்பட ரசிகர்களுக்கு இந்தப் படத்தை அர்ப்பணிக்கிறேன்.