மஹத் ராக்வேந்திரா, தேவிகா சதீஷ், மானசா சௌத்திரி நடிக்கும் இணையத் தொடர் “ஈமோஜி”

130

சென்னை.

தமிழ் சினிமாவின் இளம் திறமையாளரான மஹத் ராகவேந்திரா அடுத்தடுத்து நேர்த்தியான கதைகள் மற்றும் வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் கொண்ட படங்கள் செய்து வருகிறார். தயாரிப்பின் பல கட்டங்களில் இப்படைப்புகள் இருந்து வரும் நிலையில், அடுத்ததாக  தற்போது ஈமோஜி எனும் வெப்தொடரில் நடித்துள்ளார். திருமணமான தம்பதி தாங்கள் இருவரும் பிரிய நினைக்க, அவர்களை காதல் இணைத்ததா? என்பதாக, அவர்களை சுற்றிய உணர்வுபூர்பமான ஒரு  காதல் கதையாக இத்தொடர் உருவாகியுள்ளது.

நடிகர்கள் மற்றும் குழுவினர் தொற்றுநோய் சூழ்நிலையில் கடுமையான சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி சென்னையில் படப்பிடிப்பைத் நடத்தியுள்ளனர். மேலும் தென்காசி, நாகர்கோவில், ஹைதராபாத் மற்றும் கேரள வனப்பகுதிகளிலும்  இந்த  தொடர் படமாக்கப்பட்டுள்ளது. மஹத் ராகவேந்திரா கதாநாயகனாகவும், தேவிகா சதீஷ் கதாநாயகியாகவும் நடிக்க, இந்த தொடரில் மானசா மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், V.J.ஆஷிக், பிரியதர்ஷினி ராஜ்குமார் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஈமோஜி தொடரை  Sen. S. ரங்கசாமி எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக ஜலந்தர் வாசன், கலை இயக்குநராக வனராஜ், R.H.விக்ரம் இசையமைப்பாளராகவும், M.R.ரெஜீஷ் படத்தொகுப்பாளராகவும், சந்தியா சுப்பவரபு ஆடை வடிவமைப்பாளராகவும், N.சந்திரசேகர் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இருவர் ஒன்றானால் மற்றும் பொற்காலம் படங்களை தயாரித்த A.M. சம்பத் இந்த ஈமோஜி இணைய தொடரை தயாரித்துள்ளார். இவர் இதற்கு முன்பாக தீனா, ரமணா படங்களில் கிரியேட்டிவ் டைரக்டராகவும், அமீர்கான் நடித்த கஜினி படத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.