சென்னை.
பிரபல முன்னணி நடிகர்கள் மற்றும் பெரு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிப்பதால், படத்தின் மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ள நிலையில், சமீபத்திய அறிவிப்பு படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது. ஆம், எவர்கிரீன் ஆன் ஸ்கிரீன் ஜோடியான K பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் இப்படத்தில் கவின் பெற்றோராக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
‘முதல் நீ முடிவும் நீ’ படப்புகழ் ஹரிஷ், ‘வாழ்’ படப்புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். எழில் அரசு K (ஒளிப்பதிவு), ஜென் மார்ட்டின் (இசை), கதிரேஷ் அழகேசன் (எடிட்டிங்), சண்முக ராஜ் (கலை), சுகிர்தா பாலன் (ஆடை வடிவமைப்பு), APV மாறன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), அருணாச்சலம் சிவலிங்கம் (ஒலி வடிவமைப்பு) ஆகியோர் முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்களாக பணியாற்றுகின்றனர்.