சென்னை.
நடிகர் விஜய் ஆண்டனி, தனித்துவமான கதாபாத்திரங்கள் மற்றும் அற்புதமான திரைக்கதைகள் மூலம் மக்களை மகிழ்விக்க ஒருபோதும் தவறியதில்லை. அடுத்ததாக அவர் நடிப்பில் வரவிருக்கும் ‘கொலை’ திரைப்படத்தில் துப்பறியும் நபராக ஒரு புதிய வித்தியாசமான பாத்திரத்தில் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். தற்போது வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பையும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் ரித்திகா சிங், சந்தியா என்ற இளம் காவலராக விஜய் ஆண்டனியுடன் இணைந்து பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் தோன்றுகிறார். பாலாஜி குமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை கமல் போரா, லலிதா தனஞ்சயன், பிரதீப் B, பங்கஜ் போரா மற்றும் S விக்ரம் குமார் ஆகியோர் Infiniti Film Ventures சார்பில் டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை உடன் இணைந்து, Lotus Pictures சார்பில் சித்தார்த்தா சங்கர் மற்றும் அசோக் குமார் உடன் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இயக்குனர் பாலாஜி குமார் கூறுகையில்..,
“கொலை” திரைப்படம் 1923 இல் நடந்த டோரதி கிங்கின் கொலை சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும், அந்த கொலை சம்பவம் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்கு ள்ளாக்கியது, அந்த கொலையின் பின்னால் உள்ள மர்மத்தை உடைக்க உலகம் துடித்தது. இப்படத்தின் இறுதி திரைக்கதை பிரதிக்கு முன் 30 மாதிரி வரைவுகளில் வேலை செய்ய வேண்டியிருந்தது, கதையை நவீன கால பின்னணிக்கு ஏற்றவாறு மாற்ற இந்த தேவை இருந்தது. படத்தின் சாராம்சம் பற்றி அவர் மேலும் கூறுகையில்.., “கதை லீலா என்ற அழகான மாடலைப் பற்றியது, அவர் தனது மேல்தட்டு குடியிருப்பில் கொலை செய்யப்படுகிறார். அவளுக்குத் தெரிந்த ஐந்து ஆண்களில் , ஒவ்வொருவரும் லீலா இறக்க வேண்டி விரும்புவர்களாக இருக்கிறார்கள். அதில் கொலையாளி யார் என்பது மர்மம். துப்பறியும் நபரான விநாயக் பல ஆண்டுகளாக தனிப்பட்ட சோகத்தால் களப்பணிகளில் இருந்து விலகி, முடங்கி இருக்கிறார். இந்த கொலை வழக்கு சிக்கலானதாக இருப்பதால், காவல்துறைக்கு வேறு வழிகள் இல்லை, கொலை மர்மத்தை உடைக்க அவரை மீண்டும் கொண்டு வர வேண்டும். மர்மத்தைத் தீர்க்கும் வல்லவராக அவர் இருக்கிறார். ரித்திகா சிங் இப்படத்தில் சந்தியாவாக நடிக்கிறார், அவர் தனது உயரதிகாரியான விநாயகின் கீழ் வேலை செய்து வழக்கின் மர்மங்களை கண்டறிந்து அதைத் தீர்க்க வேண்டும்.
விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் இப்படத்தின் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, ஜான் விஜய், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, மீனாட்சி சவுத்ரி, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போரா ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
முன்னதாக விடியும் முன், மற்றும் 9 லைவ்ஸ் ஆஃப் மாறா போன்ற படங்களை இயக்கிய பாலாஜி குமார் ‘கொலை’ படத்தை எழுதி இயக்கியுள்ளார், . சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு (விடியும் முன், இறுதி சுற்று, என்ஜீகே, இறைவி புகழ்), R.K.செல்வா படத்தொகுப்பு (சார்பட்டா பரம்பரை, கர்ணன், பரியேறும் பெருமாள், மூக்குத்தி அம்மன்) ஆகியவற்றைக் கையாள்கின்றனர். இந்தப் படத்துக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். முன்னதாக, அவர் விடியும் முன், மெரினா, நெற்றிக்கண், அவள் மற்றும் மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களில் மிகச்சிறந்த இசைக்காக பாராட்டுக்களை பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.
‘கொலை’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான Infiniti Film Ventures நிறுவனமும், விஜய் ஆண்டனியும் ஏற்கனவே ‘கோடியில் ஒருவன்’ படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும் ‘ரத்தம்’ மற்றும் ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றி வருகின்றனர் இந்த இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.