ஸ்ரீநிவாசா சிட்தூரி தயாரிப்பில் “ தி வாரியர்” திரைப்படத்தின் சிங்கிள் டிராக் ‘புல்லட் பாடல்’ வெளியீடு!

120

சென்னை.

ஸ்ரீநிவாசா சிட்தூரி தயாரிப்பில், இயக்குநர்  லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்  ராம் பொத்தினேனி  நடிப்பில், தமிழ்-தெலுங்கு மொழியில் உருவாகும் “தி வாரியர்” திரைப்படத்தில் ஒரு சிறப்பு பாடலை கோலிவுட் முன்ணனி நடிகர் சிம்பு பாடியுள்ளார்.  அப்பாடலின் லிரிகல் வீடியோ வெளியீட்டு  விழா திரை பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்,

நடிகர் தயாரிப்பாளர் உதயநிதி பேசியதாவது…

ஒரு படத்தில் லிரிக் வீடியோ வெளியீடு   இவ்வளவு பெரிதாக நடந்து நான் பார்த்ததில்லை. இத்தனை பெரிய விழா படத்தின் வெற்றியை இப்போதே உறுதி செய்துவிட்டது.  இந்த வாரியர் எனும்  தலைப்பு இயக்குநர் லிங்குசாமி அவர்களின்  குணத்திற்கு மிகவும் பொருந்தும். கோவிட் காலத்தில் யாரும் வெளியே வரவே பயந்த நேரத்தில், வெளியே வந்து அவரது  சொந்த முயற்சியில்  பல உதவிகள் செய்தார்.  மிக நல்ல மனிதர்.  அவரும் நானும் 10 ஆண்டுகள் முன்பாக சேர்ந்து படம் செய்வதாக இருந்தோம். விரைவில் ரெட் ஜெயண்டில் நாம்  படம் செய்யலாம் சார்.  நடிகர் ராமை  பார்த்த  சிறிது நேரத்தில் இருவரும்  நண்பர்களாகி விட்டோம்,  நன்றாக தமிழ் பேசுகிறார் வாழ்த்துக்கள், கீர்த்தி அழகாக இருக்கிறார். படம் போட்டு காட்டுங்கள் என்றேன் வாங்கிங்க என்றார்கள் இப்பவே என்னை திட்டுகிறார்கள் இந்தப்படம் வாங்க மாட்டேன் என்றேன். பாடல் மிக நன்றாக இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் பேசியதாவது…

இந்த பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்திருக்கும் உதயநிதி சாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எனது கடினமான காலங்களில் மிகவும் உறுதுணையாக இருந்ததற்காக உதய் அண்ணாவுக்கு  நன்றி. எனது தந்தையின் மறைவின் போது அவர் தனது முழுமையான ஆதரவை வழங்கிய தருணத்தை என்னால் மறக்க முடியாது. லிங்குசாமி சாரும் நானும் நீண்ட நாட்களாக இணைந்து பணியாற்ற விரும்பினோம், எங்கள் படைப்புகளை அடிக்கடி இருவரும் பாராட்டி கொள்வோம். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற முடியவில்லை. கடைசியாக இந்தப் படத்தில் நாங்கள் இணைவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. லிங்குசாமி நல்ல உள்ளம் கொண்டவர், எல்லோரையும் எப்போதும் பாராட்டுபவர். ஆதியும் நானும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். எங்கள் அப்பாக்கள் பிளாக்பஸ்டர் கலவையாக இருந்தனர், மேலும் ஒன்றாக, பல வெற்றித் திரைப்படங்களை வழங்கியுள்ளனர். நடிகை கீர்த்தி  வெற்றிக்காக நான் எப்போதும் பெருமைப்படுகிறேன். தமிழ் திரைத்துறைக்கு அவரை வரவேற்கிறேன். விவேகா சார் இந்தப் படத்துக்காக அட்டகாசமான பாடல்களை எழுதியுள்ளார். தயாரிப்பாளர் எளிமையாக அமைதியாக இருப்பதாக தோன்றலாம், ஆனால் தனது தயாரிப்புக்காகச் செலவு செய்யும் வள்ளலாக இருப்பார். திரைப்படங்கள் மீதான அவரது ஆர்வமும் வேட்கையும் தீராதது. ஒளிப்பதிவாளர் சுஜித் சார் இந்தப் படத்துக்கு விஷுவல் மேஜிக் செய்திருக்கிறார். ராமை தமிழ் சினிமாவுக்கு வரவேற்கிறேன். நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள், ஆனால் அவர் மிகவும் சரளமாக தமிழில் பேசுவதைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். தமிழுக்கு சொந்தக் குரலில் டப்பிங் பேசப் போகிறார். தமிழ் ரசிகர்கள் அவரை வரவேற்பார்கள் என்று நான் நம்புகிறேன். புஷ்பாவை பெரிய ஹிட் ஆக்கிய அனைவருக்கும் நன்றி. இந்தப் பாடலை ஏற்று பாடி தந்த  சிலம்பரசன் சகோதரருக்கு எனது நன்றிகள்.”

நடிகர் ஆதி கூறியதாவது..,

லிங்குசாமி சார் எனது கதாபாத்திரத்தை வடிவமைத்தவிதம் எனக்கு பிடித்திருந்தது. பொதுவாக ஒளிப்பதிவாளர் கதாநாயகியை படம்பிடிப்பதில் அதிக ஆர்வமாய் இருப்பார்கள், ஆனால் இந்த படத்தில் அவர் எனது காட்சிகளுக்கு தான் மிகுந்த ஆவலாய் இருந்தார். எனது கதாபாத்திரம் உருவான விதமும், படம்பிடித்த விதமும் நன்றாக அமைந்திருந்தது. ராமை தமிழ்சினிமாவிற்கு நான் வரவேற்கிறேன். தேவி ஶ்ரீ பிரசாத் ஒரு ராக்ஸ்டார், இது ஒரு சார்ட்பஸ்டர் ஆல்பமாக இருக்கும். சிலம்பரசன் புல்லட் பாடலுக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார், இந்த பாடல் மிகப்பெரிய வெற்றி அடையும். ரன், சண்டகோழி போன்று வாரியர் மிகப்பெரிய கமர்சியல் வெற்றி அடையும்.

இயக்குனர் லிங்குசாமி கூறியதாவது…,

பிருந்தா சாரதி கூறியது போல், எங்கள் கவிதைகளின் ஊற்று கவிஞர் கருணாநிதி அய்யா. அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் ஒரு சிறந்த மனிதர் மற்றும் அவர் எனது அழைப்பை ஒரு போன் காலில் ஏற்று இங்கு வந்துள்ளார். இந்த புல்லட் பாடல், DSP அவரது புஷ்பா ஹிட் நேரத்தில் உருவாக்கியது, அவர் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். பாடலாசிரியர் விவேகா என்னுடன் நீண்ட காலம் பணியாற்றி வருகிறார். நா.முத்துகுமாரின் இழப்பிற்கு பிறகு, விவேகா அந்த இடத்தை எனக்கு நிரப்பியுள்ளார் . இந்த  படத்தின் தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சார் வழக்கத்திற்கு மேலாக தரக்கூடியவர். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் 3 கோடி செலவளித்துள்ளார். அவர் எனக்கு சகோதரர் போல, அவருடன் பணி புரிந்தது மகிழ்ச்சி, நாங்கள் இன்னும் பல படங்கள் பணியாற்ற உள்ளோம்.  நான் வில்லன் கதாபாத்திரத்திற்காக ஆதியை தொடர்புகொண்ட போது, அவர் சிறிது காலம் எடுத்துகொண்டார், நாங்கள் நிவின் பாலியை நடிக்க வைக்க யோசித்தோம். பின்னர் அந்த கதாபாத்திரத்தின் லுக் உடன் வந்து என்னை ஆச்சர்யபடுத்தினார். இந்த படத்தின் பாடல் மற்றும் நடிப்பிற்காக கீர்த்தி ஷெட்டி நிறைய உழைப்பை அளித்துள்ளார். ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், நிரவ் ஷா மற்றும் ஜீவாவின் கலவை. நான் பல நடிகர்கள் உடன் பணியாற்றியுள்ளேன், அதில் ஒரு சிலர் மட்டுமே நேர உணர்வு உள்ளவர்கள், அதில் மம்முட்டி, மாதவனுக்கு அடுத்து ராமும் ஒருவர், அர்பணிப்பு மற்றும் ஒழுக்கம் நிறைந்தவர் ராம்”

நடிகர் ராம் பொத்தினேனி கூறியதாவது…,

இங்கு வந்ததற்கு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. பொதுவாக எதிர்மறையான விஷயங்கள் வேகமாக பரவும், ஆனால் உதயநிதி சார் உடைய நல்ல விஷயங்கள் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பரவியுள்ளது.  தேவி ஶ்ரீ பிரசாத் மற்றும் நான் இணைந்த படங்கள் தெலுங்கில் பெரும் வெற்றியை அடைந்துள்ளன. அந்த வரிசையில் இந்த படமும் அமையும். தயாரிப்பாளர் சித்துரி அவர்கள் இந்த பாடலுக்காக நிறை செலவழித்துள்ளார், அதற்கு நன்றி, படபிடிப்பின் போது போஸ் சார் என்னை நன்றாக பார்த்துகொண்டார். சுஜித் சார் இந்த பாடலுக்கு, அற்புதமான விஷுவலை வழங்கியுள்ளார். கிரித்தி ஷெட்டி ஒரு குழந்தை போல், அழகாக நடித்துள்ளார். ஆதி உடைய கதாபாத்திரம் சிறப்பான ஒன்றாக இருக்கும். அவர் ஹீரோவாக நடித்த படங்கள் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கின்றன, அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருந்தார். ஆனால் இந்த படத்தில் நடிக்க ஒத்துகொண்டதற்கு அவருக்கு நான் நன்றி கூறிகொள்கிறேன்.  லிங்குசாமி சார் பற்றி என்ன கூறுவது என்று எனக்கு தெரியவில்லை. ரன் திரைப்படம் தான் நான் சென்னையில் பார்த்த முதல் படம். தமிழில் தான் நான் முதலில் அறிமுகமாக விருந்தேன் ஆனால் அது நடக்கவில்லை, ஆனால் இப்போது அது லிங்குசாமி சார் உடன் நடக்கவிருக்கிறது நன்றி.

“புல்லட்” பாடலை தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ராம் பொத்தினேனி, லிங்குசாமி மற்றும் தேவி ஶ்ரீ பிரசாத் உடைய நண்பரான நடிகர் சிம்பு இப்பாடல்களை பாடியுள்ளார். இந்த மாஸ் பாடல் படத்தின் முக்கியமான ஒன்றாக இருக்கும், இப்படம் ஜூலை 14 உலகமெங்கிலும்  தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் திரையரங்குகளில்  வெளியாகவுள்ளது. கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமான ஆதி பினிஷெட்டி , தி வாரியர் படத்தில் வில்லனாகவும், தென்னிந்தியாவின் வளர்ந்து வரும் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்கள்.Srinivasaa Silver Screen பேனர் சார்பில் ஸ்ரீநிவாசா சிட்தூரி இப்படத்தை  தயாரித்துள்ளார். திரு.பவன் குமார்  இப்படத்தை வழங்குகிறார்.

தொழில் நுட்ப குழு விபரம்:

இயக்கம் – N லிங்குசாமி
இசை – தேவி ஶ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு  – சுஜித் வாசுதேவ்
படத்தொகுப்பு – நவீன் நூலி
சண்டைகாட்சி இயக்குநர்கள் – அன்பறிவ் & விஜய்
கலை இயக்கம் – DY சத்ய நாராயணா
எழுத்தாளர்கள் – புர்ரா சாய் மாதவ் & பிருந்தா சாரதி
பாடலாசிரியர் – விவேக் & ஶ்ரீமனி
நடனம் – சேகர், ஜானி & சதீஷ் கிருஷ்ணன்
மொழி – தமிழ் , தெலுங்கு
தயாரிப்பு நிறுவனம் – ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்
தயாரிப்பாளர் – ஶ்ரீனிவாசா சிட்தூரி
வழங்குபவர் – பவன் குமார்
தமிழ் நாடு வெளியீடு – மாஸ்டர் பீஸ்