சென்னை.
கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தின் சிறப்புக் காணொலி (கிளிம்ப்ஸ்) வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை எத்திராஜ் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் முன்னிலையில் வெளியிடப்பட்ட கிளிம்ப்ஸ் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. இதுவரை இல்லாத வகையிலான அதிரடி ஆக்ஷனில் மோகன் கலக்கி உள்ள நிலையில், 1.70 லட்சம் பார்வகளுக்கு மேல் இது வரை கிளிம்ப்ஸ் பெற்றுள்ளது.
ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் உலகத் தரத்தில் அமைந்துள்ளதாக பார்வையாளர்கள் பாராட்டுகின்றனர். சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ஹரா படத்தின் டைட்டில் டீசர் 14 லட்சம் பார்வைகளை கடந்த நிலையில், கிளிம்ப்ஸும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பையும் விறைவில் நிறைவு செய்து, படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டு வர இயக்குநர் விஜய் ஸ்ரீ தலைமையிலான படக்குழுவினர் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.
இதுவரை மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, ‘ஹரா’ படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே முதலுதவி, குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல, ஐபிசி சட்டங்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த படத்தின் முக்கிய கருத்தாகும். சாருஹாசன் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான ‘தாதா 87’ மற்றும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் கதைநாயகனாக அறிமுகமாகும் விரைவில் வெளியாகவுள்ள ‘பவுடர்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் விஜயஸ்ரீ அதிரடி மேக்கிங்கில், மோகன் நடிக்கும் ‘ஹரா’ திரைப்படத்தை கோவை எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.
லியாண்டர் லீ மார்ட்டி ஹரா படத்திற்கு இசையமைக்க, மனோ தினகரன் மற்றும் பிரஹாத் முனியசாமி ஒளிப்பதிவை மேற்கொள்கின்றனர். படத்தொகுப்பை குணா கையாள, படத்தின் மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனிக்கிறார்.
‘Mohan rocks in action avatar: Haraa glimpse raises expectations’
A special glimpse of Silver Jubilee Star Mohan’s comeback film ‘Haraa’ directed by Vijay Sri and bankrolled by Coimbatore S P Mohan Raj and G Media’s Jaya Sri Vijay has been released and received huge response. The glimpse, which was released in the presence of thousands of students at Ethiraj College, Chennai, caused a great euphoria among them. Mohan is seen in action like never before in the glimpse, which has received over 1.70 lakh views so far.
Viewers appreciate that all aspects of the glimpse, including cinematography and music, are of world-class. With the recently released title teaser of Haraa surpassing 14 lakh views, the glimpse have also received a great reception which has thrilled the film crew. Two schedules of filming are over and the crew, led by director Vijay Sri, is busy working to complete the third phase of shooting and bring the film to the screen as a Deepavali feast.
The crew says that just as people have been enjoying watching Mohan in various roles so far, his character in ‘Haraa’ will also be highly talked about. The main idea of the film is to make children aware of IPC rules, just as they teach children first aid, including Good Touch and Bad Touch, from the time they are in school.
Coimbatore S P Mohan Raj and Jaya Sri Vijay of G Media are jointly producing Mohan-starrer ‘Haraa’, which is directed by Vijay Sri, following the 2019 film ‘Dhadha 87’ starring Chaaruhaasan and the soon-to-be-released ‘Powder’ starring publicist Nikil Murukan as the protagonist.Leander Lee Marty is scoring the music for Haraa, while Mano Dinakaran and Prahath Muniyasamy handle cinematography. Editing is by Guna, while Nikil Murukan is the publicist.