சென்னை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிலிருந்து மீண்டும் ஒரு ஹீரோ சினிமாவில் நடிகராக உருவாகிறார். சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் இரண்டாவது மகன் தர்சன் கணேசன்தான் நடிக்க வருகிறார்.
ஏற்கனவே மூத்தவர் துஷ்யந்த் தயாரிப்பளராகவும், நடிகராகவும் இருப்பது அனைவரும் தெரிந்தது. அவருக்கு அடுத்தவர் தர்சன் கணேசனும் நடிக்க வருகிறார். பூனேயில் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு , தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்கள் அரங்கேற்றி விட்டு தகுந்த பயிற்சியுடன் நடிக்க வந்திருக்கும், அவருக்கு பல சினிமா கம்பெனிகள் அழைப்பு விடுத்துள்ளார்கள். விரைவில் முறைப்படி அவர்கள் அறிவிப்பார்கள் என தெரிகிறது. தாத்தாவை போலவே தெருக் கூத்து நாடகத்தில் நடித்து, அன்னை இல்லத்திலிருந்து மீண்டும் ஒரு நடிகர் உருவாகிறார்…என்பது குறிப்பிடத்தக்கது.
Grandson of Sivaji Ganesan,Dharsan Ganesan is about to soon make his debut as hero.
An another hero is rising from the home of Nadigar Thilagam sivaji ganesan. Sivaji Ganesan’s son Ramkumar is the father of Dharsan Ganesan and he is the second son to him. Everyone already knows, Ramkumar’s elder son Dushyanth is a producer and actor.Now his younger son dharsan ganesan is also going to act.He studied acting course in pune and did street dramas in Tamil,hindi and english and now he is well trained.lot of companies has invited him to work with.They will announce it in a proper way. He did Street dramas like his grandfather and again a hero is rising from Annai Illam.